இன்னும் 4 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமர்க்களமான ராஜயோகம் ஆரம்பம்

Sukran Peyarchi Palangal: பணவரவு, செழிப்பு, அறிவாற்றல், சுகபோகம் ஆகியவற்றின் காரணி கிரகமாக உள்ள சுக்கிரன் ஜூன் 12 ஆம் தேதி மிதுன ராசியில் பெயர்ச்சியாக உள்ளார். இந்த பெயர்ச்சியால் அதிகப்படியான நன்மைகளை அடைய உள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Sukran Peyarchi Palangal: அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என்று அழைக்கப்படுகின்றன. ஜூன் 12 அன்று நிகழும் சுக்கிரன் பெயர்ச்சியால் எந்தெந்த ராசிகளுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்க உள்ளன என்று இங்கே பார்க்கலாம்.

1 /10

ஜோதிட சாஸ்திரத்தின் படி, அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. ராசிகள் தவிர கிரகங்களின் நட்சத்திரங்கள், உதய, அஸ்தமன நிலைகள், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என்று இன்னும் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன.  

2 /10

கிரகப் பயிற்சிகள் மற்றும் கிரகங்களின் இயக்கத்தின் மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் ஏற்படுகின்றது. இவற்றால் சுப விளைவுகளும் சில ராசிகளில் பிரச்சனைகளும் உண்டாகும்.

3 /10

புத்திக்கூர்மை, அறிவாற்றல், சுகபோகங்கள், பேச்சாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக இருப்பவர் சுக்கிரன். இவரது பெயர்ச்சி அனைத்து ராசிகளிலும் பலவித மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. சுக்கிரன் ஜூன் 12-ம் தேதி மிதுன ராசியில் பெயர்ச்சியாக உள்ளார்.

4 /10

மிதுன ராசியில் சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் ஏற்படும். இவர்களுக்கு பணவரவு அதிகமாகும். வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

5 /10

மேஷம்: சுக்கிரன் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு ஆக்கப்பூர்வமான பலன்களை அளிக்கும். தைரியமும் உறுதியும் அதிகரிக்கும். பணியிடம் மற்றும் வியாபாரத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும். இவர்களது நிலைமை மேம்படும். பணியிடத்தில் ஊதிய உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. திருமண பந்தம் மகிழ்ச்சியாக இருக்கும்.

6 /10

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு சுக்கிர பெயர்ச்சி ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். இந்த காலத்தில் இவர்களுக்கு பலவித நற்பலன்கள் கிடைக்கும். உலக இன்பங்களை அனுபவித்த மகிழ்வார்கள். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். நிதிநிலை நன்றாக இருக்கும்.

7 /10

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி பணவரவை அதிகரிக்கச் செய்யும். இவர்களது நிதி நெருக்கடி சரியாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். தேர்வு எழுதுபவர்களுக்கு இந்த காலம் வெற்றிகரமாக இருக்கும். வாழ்க்கையில் பலவிதம் முன்னேற்றங்களை காண்பீர்கள். மகிழ்ச்சி அமைதியும் இருக்கும்

8 /10

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு இது நற்பலன்களை அள்ளித் தரும். பண வரவு அதிகமாகும். மாத வருமானம் அதிகரிக்கும். இதனால் நிதிநிலை நன்றாக இருக்கும். பணியிடத்திலும் உங்கள் பணி பாராட்டப்படும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நல்ல காலம் துவங்கும்.

9 /10

துலாம்: சுக்கிரன் பயிற்சி துலா ராசிக்காரர்களுக்கு சுபமாக இருக்கும். இவர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். நீண்டு தூர பயணத்தை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. பயணங்களால் அனுகூலமான நன்மைகள் உருவாகும். குடும்பத்தாருடன் மகிழ்ச்சியான பொழுதை கழிப்பீர்கள். பணியிடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வது நல்லது.  

10 /10

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.