கோடைகாலத்தில் இந்த ஜூஸ்களை மறந்தும் குடிக்காதீங்க!

கோடைகாலத்தில் ஏற்படும் வெப்பத்தை தணிக்க நாம் பலவகையான பானங்களை குடிக்கிறோம் ஆனால் அவை அனைத்தும் உடலுக்கு ஆரோக்கியமானது கிடையாது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

 

1 /4

சோடா, கோக், ஸ்ப்ரைட், ஃபேண்டா போன்ற அதிகம் சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும், உதாரணமாக ஒரு 12 அவுன்ஸ் கோக் கேனில் 39 கிராம் சர்க்கரை உள்ளது.  இப்படிப்பட்ட சர்க்கரை அதிகமுள்ள பானங்களை குடிப்பதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்.  

2 /4

லெமனேட் குடிப்பதற்கு ருசியாக இருந்தாலும் இது ஆரோக்கியமான பானம் கிடையாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  சோடாக்களில் சேர்க்கப்படுவதை போலவே லெமனேட்களிலும் அதிகளவில் சர்க்கரை சேர்க்கப்படுகிறது.  இதுபோன்ற சர்க்கரை நிறைந்த பானங்கள் நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும்.  

3 /4

தேநீர் உடலுக்கு புத்துணர்ச்சியை தரும் என்றாலும் அதில் சர்க்கரை சேர்த்து குடிப்பது உடலுக்கு ஆரோக்கியமானது கிடையாது.  இதிலுள்ள காஃபின் வீக்கத்திற்கு வழிவகுக்கிறது, எனவே சர்க்கரை சேர்க்கப்பட்ட தேநீரை தவிர்ப்பது நல்லது.  

4 /4

டயட் சோடா பிரபலமாக இருந்து வருகிறது, ஆனால் இந்த சோடாக்களில் சேர்க்கப்படும் செயற்கையான சர்க்கரையானது குடலிலுள்ள நல்ல பாக்டீரியாக்களை தொந்தரவு செய்கிறது.