ஜோதிடத்தின் படி, ஒரு கிரகம் ராசியை மாற்றும் போது, அது மனித வாழ்க்கையிலும் நமது உலகிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், இந்தப் பெயர்ச்சி சிலருக்கு சுபமாகவும், சிலருக்கு அசுபமாகவும் இருக்கும். அதன்படி குரு வக்ர நிலையில் இருப்பது ஜோதிடத்தில் பெரிய நிகழ்வாக கருதப்படுகின்றது. அந்தவகையில் கடந்த ஜூலை 29 அன்று குரு பகவான் வக்ரமானார். இதன் பலன் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டு வருகிறது. ஆனால் இந்த நேரத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டிய 4 ராசிக்காரர்கள் உள்ளனர். அவை எந்தெந்த ராசிகள் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
மேஷம்: உங்களுக்கு, குரு கிரகத்தின் வக்ர பெயர்ச்சி சற்று வேதனையாக இருக்கும். இந்த நேரத்தில் உங்கள் செலவுகள் அதிகரிக்கலாம். மேலும், வியாழன் கிரகம் உங்கள் விதியின் அதிபதி. எனவே, இந்த நேரத்தில் நீங்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெற முடியாது. தேவையற்ற செலவுகள் கூடும். இந்த நேரத்தில் குருவின் பீஜை மந்திரத்தை ஜபித்து மஞ்சள் வஸ்திரத்தை தானமாக கொடுக்கலாம். சிவா பெருமானுக்கு அரைத்த மஞ்சளை வைத்து அபிஷேகம் செய்யலாம். வியாழன் அன்று மஞ்சள் பொருட்களை தானம் செய்யலாம்.
சிம்மம்: வியாழன் கிரகத்தின் வக்ர பெயர்ச்சி உங்களுக்கு சற்று கடினமாக இருக்கும். இந்த நேரத்தில் உங்களுக்கு மஞ்சள் காமாலை, கல்லீரல், சர்க்கரை நோய் பிரச்சனைகள் ஏற்படலாம், சற்று ஜாக்கிரதையாக இருக்கவும். இந்த நேரத்தில் புஷ்பராகம் மோதிரம், தங்கம் அல்லது மஞ்சள் போன்றவற்றை அணிந்துக்கொள்ளுங்கள். சனி கிரகத்தின் மந்திரங்களை உச்சரிக்க வேண்டும்.
துலாம்: வியாழன் கிரகத்தின் வக்ர பெயர்ச்சி உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். உங்களுக்கு நீரிழிவு நோய் அல்லது வயிறு தொடர்பான நோய்கள் ஏற்படலாம். இதனுடன் கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளும் ஏற்படலாம். சனிபகவானுக்கு எண்ணெய் அபிஷேகம் செய்தால் பலன் கிடைக்கும்.
மகரம்: வியாழன் கிரகத்தின் வக்ர பெயர்ச்சி உங்களுக்கு இன்னல்களாக இருக்கும். இந்த ராசி மக்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். தொண்டையில் பிரச்சனை ஏற்படலாம். அதேபோல் தைராய்டு பிரச்சனை ஏற்படலாம், உங்களின் வீரம் மற்றும் தைரியம் குறையலாம். இந்த நேரத்தில் நீங்கள் வியாழன் கிரகத்தின் பீஜை மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். மேலும், வியாழன் கிரகம் தொடர்பான விஷயங்களையும் தானம் செய்ய வேண்டும். (பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுபேற்காது.)