குரு பெயர்ச்சி பலன்கள்: மே 1 முதல் இந்த ராசிகளுக்கு தொல்லைகள் நீங்கி நல்ல காலம் பிறக்கும்

Guru Peyarchi Palangal: குரு பகவான் சுப பலன்களை அளிக்கும் கிரகமாக பார்க்கப்படுகிறார். ஜோதிட சாஸ்திரத்தில் குரு பெயர்ச்சிக்கும் சனி பெயர்ச்சிக்கும் சிறப்பு முக்கியத்துவம் உள்ளது. 

Guru Peyarchi Palangal: கல்வி, திருமணம், புத்திசாலித்தனம், குழந்தைகள், பணம், செல்வச் செழிப்பு ஆகியவற்றுக்கு காரணி கிரகமாக உள்ள குரு பகவான் மே 1 ஆம் தேதி மேஷ ராசியிலிருந்து விலகி ரிஷப ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். இது இந்த ஆண்டின் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. குரு பெயர்ச்சியின் காரணமாக அனைத்து 12 ராசிகளிலும் ஏற்படவுள்ள மாற்றங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.  

1 /13

மேஷம்: மேஷ ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டும். செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த காலத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். 

2 /13

ரிஷபம்: குரு பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு பல வித நல்ல வாய்ப்புகளை கொண்டு வரும். வாழ்வில் முன்னேற்றம் காணப்படும். பண வரவு அதிகமாகும். நிதி நிலை மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். உங்கள் வணிகம் தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.  

3 /13

மிதுனம்: மிதுன ராசியினருக்கு இந்த நேரம் பல அதிர்ஷ்ட பலன்களைத் தரும். நீண்ட நாட்களாக செய்த கடின உழைப்பிற்கு இப்போது பலன் கிடைக்கும். இந்த நேரத்தில் வரும் வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்தினால், வாழ்க்கையில் பெரிய சாதனைகளை படைக்கலாம். இந்த நேரத்தில் எதிர்பாராத பல நல்ல செய்திகள் கிடைக்கும். 

4 /13

கடகம்: குரு பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும். அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக நடக்காமல் இருந்த பணிகள் இப்பொழுது வெற்றிகரமாக நடந்து முடியும். உடல் மற்றும் மன ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். அலுவலகத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும்

5 /13

சிம்மம்: சிம்ம ராசிக்கு குரு அருளால் பல நல்ல பலன்கள் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். மாணவர்களுக்கு இது நல்ல காலமாக இருக்கும். குறிப்பாக வெளிநாட்டில் உயர்கல்வி படிக்க விரும்பும் சிம்ம ராசி மாணவர்கள் நல்ல செய்திகளை பெறுவார்கள். பணி இடத்திலும் நல்ல செய்திகள் கிடைக்கும். ஆன்மீக விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். 

6 /13

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி அற்புதமான நற்பலன்களை அளிக்கும். உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு இப்போது கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் அன்பும் புரிதலும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும்.

7 /13

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி ஒரு வரப்பிரசாதமாக அமையும். அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வெளிநாடு செல்லும் ஆசை நிறைவேறும். சமூகத்தில் பதவி, கௌரவம் உயரும். பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும்.

8 /13

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்கள் குரு பெயர்ச்சியின் தாக்கத்தால் அதிகப்படியான வருமானத்தைப் பெறுவார்கள். பண வரவு நன்றாக இருக்கும். இதனால் பொருளாதார நிலை முன்னெறும். உடல் ஆரோக்க்கியம் நன்றாக இருக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த வாகனம் வாங்கும் அதிர்ஷ்டம் உண்டாகும்.

9 /13

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி மிகவும் சாதகமாக இருக்கும். தைரியம் அதிகரிக்கும். இந்த நேரம் வியாபாரிகளுக்கு சாதகமான நேரமாக இருக்கும். முதலீட்டில் லாபம் அட்திகமாகும். காவல்துறை, நிர்வாகம் மற்றும் ராணுவத் துறைகளுடன் தொடர்புடையவர்கள் இப்போது ஆதாயமடைவார்கள். புதிய வீடு, நிலம் வாங்க இது உகந்த நேரமாக இருக்கும். 

10 /13

மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு பண வரவு அதிகமாகும். செலவுகளும் அதிகமாக இருக்கும். பொறுமையுடன் அனைத்து பணிகளையும் செய்தால் அனைத்திலும் வெற்றி காணலாம். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். 

11 /13

கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு குரு பகவானின் அருளால் அனைத்து பணிகளிலும் வெற்றி கிடைக்கும். அலுவலகத்தில் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். 

12 /13

மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும். வணிகத்தில் லாபம் அதிகரிக்கும். பணி இடத்தில் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். குடும்ப சூழல் நன்றாக இருக்கும்.

13 /13

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.