ராகு கேது பெயர்ச்சி: இந்த ராசிகள் உச்சம் தொடுவார்கள், வெற்றிகள் கைகூடும்

Rahu Ketu Peyarchi, Impact on Zodiac Signs: ஜோதிடத்தில், ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்களாகக் கருதப்படுகின்றன. இவை எப்போதும் வக்ர இயக்கத்தில் செல்கின்றன. 

பொதுவாக ராகு மற்றும் கேதுவை பார்த்து மக்கள் அச்சப்படுவது உண்டு. ஆனால், ஒருவரது ஜாதகத்தில் ராகுவும் கேதுவும் சுப நிலையில் இருந்தால், அந்த நபருக்கு பல நன்மைகளை அள்ளித் தருகிறார்கள். தற்போது ராகு கிரகம் மேஷ ராசியிலும், கேது துலாம் ராசியிலும் உள்ளனர். ராகுவும் கேதுவும் அக்டோபர் 30 ஆம் தேதி ஒரே நாளில் தங்கள் ராசியை மாற்றப் போகின்றன. இந்த பெயர்ச்சியால் அதிகப்படியான நற்பலன்களை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

1 /8

ராகு, கேது: ஜோதிட சாஸ்திரத்தில் ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்கள் என அழைக்கப்படுகின்றன. இவை எப்போதும் வக்ர நிலையிலேயே நகர்கின்றன.

2 /8

ராகு கேது பெயர்ச்சி: தற்போது ராகு கிரகம் மேஷ ராசியிலும், கேது துலாம் ராசியிலும் உள்ளனர். ராகுவும் கேதுவும் அக்டோபர் 30 ஆம் தேதி ஒரே நாளில் தங்கள் ராசியை மாற்றப் போகின்றன. அக்டோபர் 30-ம் தேதி ராகு மேஷ ராசியிலிருந்து விலகி மாலை 4:37 மணிக்கு மீன ராசியில் பெயர்ச்சி ஆவார். அதே வேளையில் கேதுவும் கன்னி ராசியில் பெயர்ச்சி ஆவார்.

3 /8

ராசிகளில் தாக்கம்: ராகு மற்றும் கேதுவின் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிக்காரர்களுக்கு அற்புதமான நற்பலன்கள் ஏற்படும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

4 /8

மேஷம்: ராகு மற்றும் கேதுவின் பெயர்ச்சியால், மேஷ ராசிக்காரர்கள் தங்கள் வாழ்வில் பல மாற்றங்களைக் காணலாம். மேஷ ராசிக்காரர்கள் குரு பகவானின் ஆசியைப் பெறுவார்கள். இந்த நேரத்தில் நிதி விஷயங்களில் வெற்றி கிடைக்கும். வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். 

5 /8

கடகம்: கடக ராசிக்காரர்கள் வியாபாரத்தில் வெற்றி பெறுவார்கள். ராகு மற்றும் கேதுவின் தாக்கம் இருப்பதால் சில வேலைகள் தடைபடலாம். இந்த காலகட்டத்தில், எந்த ஒரு முக்கிய முடிவையும் எடுப்பதற்கு முன், வீட்டின் பெரியவர்களிடம் ஆலோசனை பெற வேண்டும். எப்படியும் தடைகள் வந்தாலும், பணிகள் வெற்றிகரமாக நடந்து முடியும். ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் தேவை.

6 /8

சிம்மம்: ராகு-கேதுவின் ராசி மாற்றத்தால் சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் ஏற்படும். சில புதிய துறையில் முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலையை முடிப்பதில் தடைகள் ஏற்படலாம். தொடர்ந்து கடினமாக உழைத்தால் உங்கள் வேலையில் வெற்றி கிடைக்கும்.  

7 /8

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு திருமண வாழ்க்கையில் இனிமை இருக்கும். உங்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பணம் சம்பாதிக்க வாய்ப்புகள் இருக்கும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு விரைவில் திருமணம் நிச்சயம் ஆகும். அலுவலகத்தில் டென்ஷன் குறையும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். 

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.