இந்நாட்களில் நரை முடி பிரச்சனை அனைவரையும் அதிகமாக பாதிக்கின்றது. முன்னர் நடுவயதினரை கவலைக்குள்ளாக்கிய நரை முடி பிரச்சனை, இப்போது சிறு வயது முதலே காணப்படுகின்றது. மக்கள் பெரும்பாலும் வெள்ளை முடியை மறைக்க பல முடி பொருட்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த பொருட்களில் பல இரசாயனங்களும் இருப்பதால், இவை பிரச்சனைகளை அதிகமாக்குகின்றன. இது முடிக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறன.
இயற்கையான முறையில் வீட்டில் உள்ள பொருட்கள் கொண்டு இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பது மிகவும் நல்லதாகும். நரை முடிக்கான எளிய 3 தீர்வுகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
கூந்தல் நிபுணர்களின் கூற்றுப்படி, துளசி இலைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது வெள்ளை முடியை கருமையாக்க உதவுகிறது. முதலில் துளசி இலைகளை எடுத்துக் கொள்ளவும். பின்னர் நெல்லிக்காய் அல்லது அதன் இலைகளின் சாற்றையோ எடுத்துக் கொள்ளவும். பிரிங்ராஜ் இலைகளின் சாற்றை சம அளவில் எடுத்துக் கொள்ளவும். இப்போது இந்த மூன்று பொருட்களையும் சரியாக கலந்து முடியில் நன்றாக தடவவும். முடியை கருமையாக்குவதில் இந்த கலவை நன்மை பயக்கும் என்று நம்பப்படுகிறது.
கறிவேப்பிலையில் பயோ-ஆக்டிவ் பொருட்கள் காணப்படுகின்றன. இவை கூந்தலுக்கு முழு ஊட்டச்சத்தை வழங்குகின்றன. இது இள வயதில் வரும் நரை முடி பிரச்சனை நீங்குகிறது. கறிவேப்பிலை மூலம் நிவாரணம் பெற கறிவேப்பிலை பேஸ்டை கூந்தலில் தடவலாம். இது மட்டுமின்றி, நீங்கள் கூந்தலில் தடவும் எண்ணெயில் கறிவேப்பிலையைச் சேர்த்து, ஒவ்வொரு வாரமும் இதை பயன்படுத்தலாம்.
எலுமிச்சையில் உள்ள கூறுகள் முடியை கருமையாக்குவதில் பயனுள்ளதாக இருக்கும். ஆயுர்வேதத்தின்படி, நரை முடிக்கு தீர்வு காண்பதில் எலுமிச்சை அதிக திறன் வாய்ந்ததாக இருக்கும். 5 மில்லி எலுமிச்சை சாறு மற்றும் 20 கிராம் நெல்லிக்காய் பொடியை எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது இந்த இரண்டையும் கலந்து பேஸ்ட்டை உருவாக்கி, பின் இந்த பேஸ்ட்டை தலையில் தடவவும். ஒரு மணி நேரம் தலைமுடியில் அப்படியே இருக்க விட்டு, பின்னர் முடியைக் கழுவவும். இதனை சில நாட்கள் பயன்படுத்தினால் முடி கருமையாக மாறும் (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)