உயர் இரத்த அழுத்தமா.... ‘இந்த’ உணவுகளை தவிர்ப்பதால் பிபி கட்டுக்குள் இருக்கும்..!!

உயர் இரத்த அழுத்தம், நீரிழிவைப் போலவே கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது அவசியம். உயர் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இல்லை என்றால் மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்படும் அபாயம் கணிசமாக அதிகரிக்கும்.  உங்கள் இரத்த அழுத்தத்தின் அளவு எவ்வளவு அதிகமாகிறதோ, மாரடைப்பு ஏற்படும் அபாயம் அந்த அளவிற்கு அதிகரிக்கும்.

மருந்துகளின் உதவியுடன் இரத்த அழுத்த அளவைக் கட்டுப்படுத்த முடியும் என்றாலும், உணவு விஷயத்தில் கட்டுபாடு இருப்பது அவசியம். சில உணவுகளை தவிர்ப்பதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.

1 /8

உயர் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இல்லை என்றால், இதய நோய்களின் ஆபத்து அதிகரிப்பதோடு, சிறுநீரக பாதிப்பும் உண்டாகும். நீண்ட காலமாக உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படாமல் இருப்பதால் நினைவகம் தொடர்பான பிரச்சனைகளும் ஏற்படலாம், இந்நிலையில், ருயர் இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகளை அறிந்து கொள்ளலாம்.

2 /8

காஃபின் அதிகம் உள்ள பொருட்கள்: உயர் இரத்த அழுத்த நோயாளிகள் காஃபின் அதிகம் கொண்ட உணவு பொருட்களில் இருந்து, விலகி இருப்பது முக்கியம். குறிப்பாக காஃபின் அதிகம் உள்ள் காபி மற்றும்  டீ போன்ற பானங்களை அளவிற்கு அதிகமாக குடிக்காமல் இருப்பது நன்மை தரும். அளவோடு இருந்தால் பிரச்சனை இல்லை.

3 /8

உப்பு:  உப்பை அதிகமாக சமையலில் சேர்ப்பதால், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். அதிகப்படியான உப்பு உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு விஷத்தை போன்றது. எனவே, சமையலில் உப்பு மிக குறைவாக பயன்படுத்தவும்.

4 /8

ஊறுகாய்: உணவு பொருள் நீண்ட நாள் கெட்டுப் போகாமல் பாதுகாக்க உப்பு அவசியம். ஊறுகாய் போன்ற உப்பு சேர்த்து பாதுகாக்கப்பட்ட பொருட்களை உட்கொள்வது உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.  

5 /8

பேக் செய்யப்பட்ட உணவு: அதிக அளவு சோடியம் உள்ள சிப்ஸ், ரெடி டு ஈட் வகை உணவுகள் ஆகியவற்றை உயர் இரத்த அழுத்த நோயாளிகள் தவிர்ப்பது நல்லது. பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகளில் அதிக அளவில் சோடியம் உயர் இரத்த அழுத்தத்திற்கு முக்கிய காரணமாகும்.

6 /8

காரமான உணவுகள்:  உப்பைப் போலவே அதிக காரமான உணவுகள் உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும். உணவில் பயன்படுத்தப்படும் கார மசாலாக்கள் இரத்த அழுத்த பிரச்சனையை மேலும் அதிகரிக்கும்.

7 /8

சர்க்கரை:  நீரிழிவு நோயாளிகள் மட்டுமல்ல, உயர் இரத்த அழுத்த நோயாளிகளும் சர்க்கரை அல்லது இனிப்புகளிலிருந்து விலகி இருக்க வேண்டும். அதிக சர்க்கரை சாப்பிடுவது உடல் பருமனை அதிகரிக்கும் என்ற வகையில், இது, உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு நல்லதல்ல.

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.