புதிதாக கார் வாங்க விரும்புபவர்களும், ஏற்கனவே கார் வைத்திருப்பவர்களுக்கும் சி.என்.ஜி கார்களே முதல் விருப்பமாக மாறியுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் இரண்டையும் விட சிஎன்ஜி மலிவானது.
பெட்ரோல், டீசல் மீதான மத்திய அரசின் கலால் மற்றும் வாட் வரிகள் அதிகரித்து வருவதால், வாகன எரிபொருள் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், மக்கள் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களைப் பயன்படுத்துவது அதிக செலவு பிடிக்கிறது.
எரிபொருள் விலையை மனதில் வைத்து பல நிறுவனங்கள் இந்திய சந்தையில் சிஎன்ஜி கார்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகின்றன. விரைவில் அறிமுகப்படுத்தப்படும் சிஎன்ஜி கார்களின் பட்டியலைப் பாருங்கள்.
மாருதி சுஸுகி, இந்தியாவில் டீசல் கார்களுக்கு பிஎஸ்6 விதிமுறைகளை அமல்படுத்துவதற்கான காலக்கெடுவிற்கு முன்னதாகவே, தனது டிசையர் மாடலில் சிஎன்ஜியை சேர்க்க திட்டமிட்டுள்ளது. அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலைகளால் நிறுவனம் இந்த மாறுதலை விரைவில் ஏற்றுக் கொண்டுள்ளது.
டாடா மோட்டார்ஸ் அடுத்த மாதம் டிகோர் சிஎன்ஜியை இந்தியாவில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா டீலர்கள் இரண்டு சி.என்.ஜி மாடல்களுக்கும் அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவுகளை ஏற்கத் தொடங்கியுள்ளனர். 5,000 முதல் 11,000 ரூபாய் கட்டணத்தில் டாகாவின் டியாகோ மற்றும் டைகோர் கார்களுக்கு முன்பதிவு செய்யப்படுகிறது.
ஸ்விஃப்ட் வகை கார்களிலும் சிஎன்ஜி மாடல்கள் அறிமுகமாகின்றன.
டாடா மோட்டார்ஸ் இந்த ஆண்டு நவம்பரில் டியாகோ சிஎன்ஜியை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.