Luxury cruiser MV Ganga Vilas: உலகின் மிக நீளமான நதிப்பயண சொகுசு கப்பலான எம்வி கங்கா விலாஸின் பயணத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து கிளம்பிய இந்த சொகுக் கப்பலின் தொடக்க நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவல், உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா, பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வாரணாசியில் தொடங்கும் இந்த சொகுசு கப்பலின் பயணம், 51 நாட்கள் நீடிக்கும். அசாமின் திப்ருகர் வழியாக பங்களாதேஷ் செல்லும் இந்த கப்பல், இந்தியா மற்றும் பங்களாதேஷ் பகுதிகளில் உள்ள 27 நதி அமைப்புகளை கடந்து செல்ல உள்ளது.
மூன்று தளங்கள், 18 அறைகள் கொண்டது இந்த கப்பல்
சொகுசு வசதிகள் கொண்ட கப்பல்
36 சுற்றுலா பயணிகளின் தாங்கும் வசதி படைத்த சொகுசுக் கப்பல்
இந்தக் கப்பலின் முதல் பயணத்தில் இந்திய சுற்றுலாப் பயணிகள் இல்லை
சுவிட்சலாந்து பயணிகள் பயணிக்கும் நதி வழி செல்லும் கப்பல்
வாரணாசியில் சொகுசுக் கப்பலுக்கான டிக்கெட் 2 வருடங்களுக்கு புக்கிங் ஃபுல்! ஒரு டிக்கெட்டின் விலை ரூ.12 59 லட்சம்