முக்கண்ணனுக்கு அபிஷேகத் திருநாள்! சிவராத்திரிக்கும் விஷ்ணு பிரம்மாவுக்கும் தொடர்பு இது

Mahashivrathri Abishekam: அடி முடி காண இயலாத சிவ பெருமானே அண்ட சராசரங்களையும் தோற்றுவித்தார். சிவனை லிங்க வடிவில் மட்டுமல்ல, சிலை வடிவிலும் வழிபடுகிறோம். இந்து மரபின்படி, மாசி மாத தேய்பிறை சதுர்தசி திதியில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.

 

ஜோதிடத்தின் பார்வையில் மாசி மாத மகாசிவராத்திரி மிகவும் முக்கியமானது. இந்து மத நம்பிக்கைகளின்படி, இந்த நாளில்தான், முதன்முறையாக விஷ்ணுவும் பிரம்மாவும் சிவலிங்கத்தை வணங்கினர். மஹாசிவராத்திரி அன்று சிவனுக்கு அபிஷேகம் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

1 /9

சிவராத்திரி நாளில் நான்கு பிரஹங்களையும் வழிபட்டால் புருஷார்த்தம், தர்மம், அர்த்தம், காமம் மற்றும் மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை

2 /9

பிறப்பறுக்கும் பெம்மானை மகாசிவராத்திரியில் வணங்கி வளம் பெறுவோம்.

3 /9

சிவராத்திரியன்று, பிரம்ம முகூர்த்தத்தில் தொடங்கும் அபிஷேகம் மற்றும் வழிபாடு அடுத்த நாள் விடியும் வரை தொடரும்

4 /9

அபிஷேகப் பிரியர் சிவனுக்கு எண்ணிலடங்கா அபிஷேகங்கள்

5 /9

சனிக்கிழமையன்று மகாசிவராத்திரி வருவது விசேஷமான தற்செயல் நிகழ்வு

6 /9

மஹாசிவராத்திரி நாளில் பால் அபிஷேகம் அய்யனின் அருளைப் பெற்றுத்தரும்

7 /9

சிவராத்திரி நாளன்று ஏழைகளுக்கு அரிசி, சர்க்கரை, பால் தானம் செய்யுங்கள்.

8 /9

மகாசிவராத்திரி நாளில் கருப்பு எள் தானம் செய்யுங்கள். இதனால் சனி தோஷம் நீங்கி அனைத்து வேலைகளிலும் வெற்றி உண்டாகும்.

9 /9

மகாசிவராத்திரி நாளில் வஸ்திர தானம் செய்வதும் மிகவும் நல்லது. இந்த நாளில் ஏழைகளுக்கு ஆடைகள் விநியோகம் செய்யுங்கள், உணவு தானியங்களை தானம் செய்யுங்கள்.