கறிவேப்பிலையால் இத்தனை நன்மைகளா? வியக்கவைக்கும் கறிவேப்பிலையின் பயன்கள்!!

பண்டைய காலம் முதல் நம் உணவின் சுவை மற்றும் நறுமணத்தை அதிகரிக்க நாம் கறிவேப்பிலையை பயன்படுத்துகிறோம். கறிவேப்பிலை தன்னகத்தே பல நன்மைகளைக் கொண்டுள்ளது. மலிவாகவும் எளிதாகவும் கிடைக்கக்கூடிய இந்த இலை வகையால் எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை. கறிவேப்பிலையினால் நன்மைகள் மட்டுமே ஏற்படும். 

நிபுணர்களின் கூற்றுப்படி, கறிவேப்பிலையை (Curry-Leaves) அவ்வப்போது பயன்படுத்தினால், அது உடலின் சர்க்கரை அளவைக் குறைக்கும், செரிமானத்தை மேம்படுத்தும். மேலும் தலைவலி, இதய நோய்களைத் தடுக்கவும் இது உதவுகிறது. மேலும் தோல் மற்றும் கூந்தலின் அழகையும் இது மேம்படுத்தும். கறிவேப்பிலையில் ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட் கூறுகள் உள்ளன. அவை பல நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கின்றன. 

1 /4

கறிவேப்பிலை உடலில் இரத்தம், இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமிலத்தின் பற்றாக்குறையை சரி செய்கிறது. நமது உடலால் இரும்புச் சத்தை உறிஞ்சிக் கொள்ளும் திறன் குறைவதால் இரத்தசோகை ஏற்படுகிறது. இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமிலம் நிறைந்த கறிவேப்பிலை இரத்த சோகைக்கு சிறந்த சிகிச்சையாக உள்ளது.

2 /4

கறிவேப்பிலையை தினமும் பயன்படுத்தும்போது இரத்தத்தில் சர்க்கரை அளவு (Sugar Level) சீராக இருக்கும். இதில் உள்ள ஃபிளாவனாய்டு உணவில் இருக்கும் ஸ்டார்சை குளுக்கோஸாக மாற்றும். இதனால் சர்க்கரை அளவை சமன்படுத்துவதில் உடலுக்கு உதவி கிடைக்கிறது. கறிவேப்பிலை இயற்கையாகவே இன்சுலின் உற்பத்தியின் செயல்முறையை துரிதப்படுத்துகிறது. அதிகப்படியான கொழுப்பின் அளவை சரி செய்கிறது 

3 /4

கறிவேப்பிலை தீங்கு விளைவிக்கும் கொழுப்பின் அளவைக் குறைக்கிறது, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது. மேலும் கறிவேப்பிலை பல்வேறு நோய்களிலிருந்து உடலை பாதுகாக்கிறது. கறிவேப்பிலையில் இரத்தத்தில் உள்ள கொழுப்பின் மேற்பரப்பைக் குறைக்க உதவும் பொருட்கள் உள்ளன.

4 /4

கறிவேப்பிலை இளநரையைத் (Hair Greying) தடுக்கிறது. கூந்தலில் ஷாம்பு கண்டிஷனர் பயன்படுத்துவதால் ஏற்படும் சேதத்தைத் கறிவேப்பிலை தடுக்கிறது. பாதிக்கப்புக்குள்ளான கூந்தலை அது மீண்டும் ஆரோக்கியமாக்குகிறது, முடி உதிர்வதைத் தடுக்கிறது, வறட்சியைத் தடுக்கிறது. மேலும் கூந்தல் அடர்த்தியாக வளரவும் இது உதவுகிறது.  முடி வளர்ச்சிக்கும் கறிவேப்பிலை பயன்படுகிறது. கறிவேப்பிலையில் போதுமான அளவு வைட்டமின் சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கால்சியம் ஆகியவை காணப்படுகின்றன. இது முடி வளர்ச்சியை மேம்படுத்துகிறது. முடி உதிர்வதைத் தடுக்கவும் உதவுகிறது. பாதிக்கப்பட்ட கூந்தலின் சிகிச்சையையும் அழகையும் அதிகரிக்க, சிறிய அளவு கறிவேப்பிலையை எடுத்து தேங்காய் எண்ணெயில் போட்டு நன்றாக கொதிக்க விடவும். இலைகளின் நிறம் பழுப்பு நிறமாக மாறத் தொடங்கும் போது, ​​அதை அடுப்பிலிருந்து எடுத்து, குளிர வைத்து வாரத்திற்கு மூன்று முறையாவது தடவவும். இப்படி 15 நாட்களுக்கு பயன்படுத்தினால், அற்புதமான வித்தியாசங்களை உங்கள் கூந்தலில் காண்பீர்கள்.