Petrol மூலம் விவசாயம், சர்க்கரை ஆலைகளுக்கு அதிக வருமானம்: அரசின் 2025 Plan இதுதான்

2025 ஆம் ஆண்டிற்குள், பெட்ரோல் விவசாயிகள் மற்றும் சர்க்கரை ஆலைகளின் வருமானத்தை அதிகரிக்கும். ஆம்!! பெட்ரோலில் எத்தனால் கலவையை இரட்டிப்பாக்க மோடி அரசு முடிவு செய்துள்ளது. பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கருத்துப்படி, இந்தியா, பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் சேர்க்கும் இலக்கை அடைவதற்கான கால அளவை 5 ஆண்டுகள் குறைத்து அதை 2025 ஆக்கியுளது. 

தொடர்ந்து விலை அதிகரித்துக்கொண்டிருக்கும் எண்ணெயின் இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

1 /5

FIPI (இந்திய பெட்ரோலிய தொழில் கூட்டமைப்பு) விருது நிகழ்ச்சியில், 2014 ஆம் ஆண்டில், ஒரு சதவீதத்திற்கும் குறைவான எத்தனால் பெட்ரோலில் பயன்படுத்தப்பட்டதாகவும், இதன் இலக்கு 5 சதவீதமாக இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

2 /5

தேசிய தலைநகரில் பெட்ரோல் விலையில் மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் டீசல் விலை லிட்டருக்கு ரூ .76.48 ஆக உயர்ந்துள்ளது (இன்று டீசல் விலை). பெட்ரோல் விலையும் லிட்டருக்கு ரூ .86.30 (இன்று பெட்ரோல் விலை) என்ற நிலையை எட்டியுள்ளது. டீசல் மற்றும் பெட்ரோல் இரண்டும் புதன்கிழமை 25-25 பைசா அதிகரித்தன.

3 /5

கடந்த ஆண்டு, 2022 ஆம் ஆண்டில் பெட்ரோலில் 10 சதவிகிதம் எத்தனால் கலக்கவும் (10 சதவிகிதம் எத்தனால் 90 சதவிகித பெட்ரோலுடன் கலத்தல்) மற்றும் 2030 க்குள் 20 சதவிகிதம் கலக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. "ஆனால் இப்போது 2024-25 க்குள் 20 சதவீதத்தை அடைவது இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்று அமைச்சர் கூறினார்.

4 /5

இந்த இலக்கை அடைந்தால், பிரேசிலுக்குப் பிறகு பெட்ரோலில் எத்தனால் சேர்க்கும் இரண்டாவது நாடாக இந்தியா இருக்கும் என்று பிரதான் கூறினார். இந்தியா தனது எண்ணெய் தேவைகளை பூர்த்தி செய்ய இறக்குமதியை 83 சதவீதம் சார்ந்துள்ளது. பெட்ரோலில் எத்தனால் சேர்ப்பதன் மூலம், இறக்குமதி குறையும். மேலும், எத்தனால் குறைந்த மாசுபடுத்தும் எரிபொருள் ஆகும். இது கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும்.

5 /5

பிரதான் கூறுகையில், '2025 க்குள் 20 சதவீத எத்தனால் சேர்க்க 1,000 மில்லியன் லிட்டர் தேவைப்படும். தற்போதைய விலையில், இதன் மொத்த விலை ரூ .60,000 முதல் 65,000 கோடி வரை இருக்கும்.” பெட்ரோலில் எத்தனால் கலப்பதை அதிகரிப்பது சர்க்கரை ஆலைகளின் வருமான ஆதாரத்தை அதிகரிக்கும் மற்றும் விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்க உதவும்.