டயட்ல இருக்கீங்களா? அப்ப இத கண்டிப்பா படிங்க: எச்சரிக்கை செய்தி!!

Dieting Side Effects: எடை இழப்புக்கு நாம் உண்ணும் உணவில் கட்டுப்பாட்டைக் கொண்டு வருவது நல்லது. ஆனால் சிலர் டயடிங், அதாவது உணவு கட்டுப்பாடு என்ற பெயரில் ஒரு நாளில் ஒரு முறை மட்டுமே சாப்பிடுகிறார்கள். நீண்ட நாட்களுக்கு இப்படி செய்வது உடலில் மோசமான விளைவை ஏற்படுத்தும். பகலில் வயிறு நிரம்ப சாப்பிட்டு, பின்னர், மாலையில் கண்டிப்பாக லேசான உணவை சாப்பிட வேண்டும். அதிக நாட்களுக்கு ஒரு வேளை மட்டும் உணவு உட்கொண்டு வந்தால், அது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு வழிவகுக்கிறது. 

ஆரோக்கியமான உடலுக்கு போதுமான அளவு சாப்பிடுவது மிகவும் முக்கியம். இது உங்களை நீண்ட காலம் ஆரோக்கியமாக வைத்திருக்கும். க்ராஷ் டயட் உடலில் மிக மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. நீண்ட நாட்களுக்கு ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு டயடிங் இருந்தால் ஏற்படும் தீமைகள் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

1 /5

தொடர்ந்து ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமோ, அல்லது, மிகக் குறைவாகவோ உணவு உட்கொண்டு வந்தால், அது எடை குறைவதற்கு வழிவகுக்கும். இதன் காரணமாக உடல் பலவீனமாகவும் சோர்வாகவும் இருக்கும். விரைவில் நோய்வாய்ப்படும் நிலை ஏற்படலாம். 

2 /5

குறைவாக சாப்பிடுவதால் உங்கள் செரிமான அமைப்பும் பாதிக்கப்படலாம். இதன் காரணமாக, உடலுக்கு சரியான அளவு ஊட்டச்சத்து கிடைப்பதில்லை. இதன் காரணமாக குடல்கள் உணவை ஜீரணிப்பதிலும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதிலும் சிரமம் ஏற்படுகின்றது. இது செரிமான செயல்முறையையும் தாமதப்படுத்துகிறது.  

3 /5

பல நேரங்களில் குறைவாக சாப்பிடுவதும் மலச்சிக்கல் பிரச்சனைக்கு வழிவகுக்கிறது. உணவில் போதுமான நார்ச்சத்து இல்லாததால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. இது தவிர, செரிமான அமைப்பின் செயல்முறையும் குறைகிறது.

4 /5

தேவையான அளவை விட குறைவாக சாப்பிடுவதன் மூலமும் உங்களுக்கு மனச்சோர்வு ஏற்படலாம். நீங்கள் மிகக் குறைந்த கலோரிகளை உட்கொண்டால், உங்களுக்கு கவலை அல்லது மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகின்றன. 

5 /5

பல நேரங்களில், போதுமான உணவை உட்கொள்ளாததால், ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. இதன் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடையும். அத்தகைய சூழ்நிலையில், உங்களுக்கு தொற்று மற்றும் குளிரால் ஏற்படும் பிரச்சனைகளால் அதிக பாதிப்புகள் ஏற்படலாம்.  (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)