எலுமிச்சை நம் உடல் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மைகளை வழங்கும் என்பது அனைவரும் அறிந்ததே. கோடைக் காலத்தில் எலுமிச்சைப் பழ சாறு குடிப்பது பலரது பழக்கம். இரவில் தூங்கும் போது ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான எலுமிச்சை சாறை குடிப்பது அற்புதமான நன்மைகளைத் தரும் என்பது பலருக்குத் தெரியாது. தினமும் வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். வெதுவெதுப்பான எலுமிச்சை தண்ணீரை குடிப்பதால் இன்னும் பல பெரிய நன்மைகளும் உண்டாகும். இவற்றைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான எலுமிச்சை தண்ணீர் உடலை நீரேற்றமாக வைத்திருக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது தவிர, எலுமிச்சை சாறு உங்கள் சருமத்திற்கும் நன்மை பயக்கும். இந்த தண்ணீர் சருமத்தை நன்கு ஈரப்பதத்துடன் வைத்திருக்கும்.
உடல் எடையை குறைப்பதில் கவனம் செலுத்துபவர்கள் தினமும் இரவில் தூங்கும் போது ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான எலுமிச்சை சாரை அருந்தலாம். இதனால் அவர்களது தொப்பையையும் குறையும்.
எலுமிச்சை நீர் செரிமானத்திற்கு சிறந்ததாக கருதப்படுகிறது. பெரும்பாலான உடல்நலப் பிரச்சினைகள் செரிமானம் சரியாக இல்லாததால் ஏற்படுகின்றன. தூங்கும் முன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான எலுமிச்சை தண்ணீரை குடிப்பது செரிமானத்திற்கு உதவுகிறது.
ஒரு கிளாஸ் எலுமிச்சைப்பழம் மவுத் ஃப்ரெஷ்ணராக பயன்படுகிறது. இயற்கையான மவுத் ஃப்ரெஷ்ணராக இருக்கும் இந்த பானத்தை எளிதில் தயாரிக்கலாம். தூங்கும் முன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான எலுமிச்சை தண்ணீரை குடித்தால் வாய் துர்நாற்றம் வராமல் தடுக்கலாம். (பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இதை எந்த வகையான பரிந்துரையாகவோ அல்லது சிகிச்சைக்கான மாற்றாகவோ எடுத்துக்கொள்ள முடியாது. எந்த வித பரிந்துரையையும் பின்பற்றும் முன் உங்கள் மருத்துவரைத் தொடர்பு கொள்ளவும். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)