சூரியப் பெயர்ச்சி 2022: சூரியனின் அருளால் இந்த 4 ராசிகளின் காட்டில் அதிர்ஷ்ட மழை பெய்யும்

சூரியப் பெயர்ச்சி 2022: ஜோதிடத்தில் சூரியக் கடவுள் கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படுகிறார். வெற்றி, மரியாதை, ஆரோக்கியம் மற்றும் செழிப்பு ஆகியவற்றைக் கொடுக்கும் கிரகம் சூரியன். ஏப்ரல் 14, 2022 அன்று சூரியன் ராசி மாறுகிறது.  மேஷ ராசியில் பிரவேசிக்கும் சூரிய பகவான் ஒரு மாதம் இந்த ராசியில் இருப்பார். இந்த மாற்றம் 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக அமையும். 

 

1 /5

உத்தியோகத்தில் மூத்தவர்களின் உதவியால் ஆதாயம் உண்டாகும். முன்னேற்றத்திற்கான பாதைகள் திறக்கப்படும். வருமானம் கூடும். புதிய வீடு, வாகனம் வாங்கலாம். தேர்வு-நேர்காணலில் வெற்றி பெறலாம்.  

2 /5

சூரியனின் மாற்றம் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை தரும். விரும்பிய பதவியும் பணமும் கிடைத்து மகிழ்ச்சிக்கு எல்லையே இருக்காது. இந்த நேரத்தில் கோபப்படுவதை தவிர்க்கவும்.

3 /5

மேஷ ராசிக்காரர்கள் தன்னம்பிக்கையுடன் இருப்பார்கள். பணியில் மாற்றம் ஏற்படலாம். முன்னேற்றம் மற்றும் வருமான வளர்ச்சிக்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பணிகளுக்காக வெளியில் செல்லலாம். வீட்டிலும் மகிழ்ச்சி நிலவும்.

4 /5

பெயர்ச்சி காலத்தில் பணம்-மரியாதை  ஆகியவை கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும், இது தொழிலில் நன்மைகளைத் தரும். பதவி உயர்வு, ஊதிய அதிகரிப்பு ஆகியவை கிடைக்கும். நீங்கள் ஆன்மீக பணிகளிலும் பங்கேற்கலாம்.

5 /5

கடக ராசிக்காரர்களுக்கு சொத்து மூலம் வருமானம் கிடைக்கும். எதிர்பாராத பண ஆதாயம் கூடும். உத்தியோகத்தில் சில மாற்றங்கள் ஏற்படலாம், அது நன்மை தரும். இடமாற்றமும் ஏற்படலாம். (பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)