மருந்துகளை பழச்சாறுகளுடன் எடுத்துக் கொள்ளும் வழக்கம் உள்ளதா... இந்த செய்தி உங்களுக்குத் தான்!

சிலருக்கு பழச்சாறுடன் மருந்து சாப்பிடும் பழக்கம் உள்ளது. ஆனால், இது ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். 

1 /4

பழச்சாறுடன் மருந்து உட்கொள்வது சில நேரங்களில் ஒவ்வாமைக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். திராட்சை, ஆரஞ்சு மற்றும் சில சமயங்களில் ஆப்பிள் சாறுடன் மருந்து உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு ஊறு விளவிக்கும். பழச்சாறு மற்றும் மருந்து கலவை மிகவும் ஆபத்தானது. சில சமயங்களில் மருந்தை சாறுடன் சேர்த்து சாப்பிடும்போது மருந்தின் செயல் திறனும் பெரிய அளவில் குறையும் எனவும் கூறப்படுகிறது. 

2 /4

திராட்சை சாறு இரத்த ஓட்டத்தில் செல்லும் மருந்துகளின் அளவைக் குறைக்கிறது என்று கூறப்படுகிறது. எனவே, இரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பு நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பழச் சாறுடன் மருந்துகளை எடுத்துக் கொள்ளக் கூடாது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். 

3 /4

ஆண்டிபயாடிக் மருந்துகள், புற்றுநோய் மருந்துகள் உட்பட பல மருந்துகளை, ஆரஞ்சு, ஆப்பிள் மற்றும் திராட்சை சாறுகளுடன் எடுத்துக் கொள்ளும் போது, மருந்தின் செயல்திறன் மிகவும் குறையும் என்று ஒரு ஆராய்ச்சியில் கூறப்பட்டுள்ளது. மேலும், பழசாற்றுடன் மருந்து சாப்பிட்ட பிறகு, பாதி மருந்து மட்டுமே உடலுக்குள் செல்லும் என ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. சாறுகள் மருந்தினை உறிஞ்சும் திறனைக் குறைக்கின்றன. எனவே, மருந்துகள் சரியாக உடலில் கிரகித்து கொள்ளப்படாது. 

4 /4

தண்ணீருடன் மருந்து எடுத்துக் கொள்ளுங்கள். மருந்தை  எப்போது  ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீருடன் எடுத்துக் கொள்ளுங்கள். மருந்தை தண்ணீருடன் எடுத்துக்கொள்வது மிகவும் பாதுகாப்பானது. மருந்தை மிக சிறிதளவு தண்ணீர் சேர்த்து சாப்பிட்டால் உடலில் சரியாக கரையாது. ஆனால் அதிக தண்ணீர் சேர்த்து எடுத்துக் கொண்டால் அவை எளிதில் கரையும். அதே போல் குளிர்ந்த நீருடன் கூட மருந்து உட்கொள்வதையும் நிச்சயம் தவிர்க்கவும்.