பெரும்பாலான மக்கள் முழங்கால் வலியில் அதிக மன உலைச்சலுக்கு ஆளாகிறார்கள். ஆனால் அதனை எப்படிச் சரிசெய்து தீர்வு காண்பது என்பது அதிகமானோரின் கேள்வியாக இருக்கிறது. இதற்கெல்லாம் ஒரு விடையாக இங்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை நீங்கள் வீட்டு வைத்தியம் மூலம் முயற்சி செய்து பார்க்கலாம்.
முழங்கால் வலி நிவாரணம் குறித்தும் வீட்டில் இருக்கும் பொருட்கள் மூலம் முழங்காலுக்குத் தீர்வு காண்பது குறித்தும் இங்கு விரிவாகப் பார்க்கலாம். அதற்கு முன்பு நீங்கள் முழங்கால் வலி நிவாரணத்திலிருந்தால் உடனடியாக சிறிது ஓய்வெடுத்துக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மேலும் இதற்கான வீட்டு வைத்தியம் இங்குத் தெளிவாகப் பார்க்கலாம்.
ஆப்பிள் சைடர் வினிகர்: ஆப்பிள் சைடர் வினிகரில் அசிட்டிக் அமிலம் மற்றும் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் உடலுக்கு அவசியமான பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது வலியைக் குறைத்து முழங்கால் வீக்கத்தைக் குறைக்கிறது.
இஞ்சி: இஞ்சி முழங்கால் வலியைக் குறைக்க ஒரு மிகப்பெரிய மூலப்பொருளாக இருக்கிறது. இதில் சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. எலும்புப்புரை ஏற்படும் போது முழங்கால் வலியைக் குறைக்க இஞ்சியை அரைத்து பின்னர் ஒரு குவளையில் இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைத்து பின்னர், தண்ணீரை வடிகட்டி, அதில் தேன் அல்லது எலுமிச்சை சேர்த்துக் குடித்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
மஞ்சள் :மஞ்சள் சக்திவாய்ந்த நோய்களுக்குத் தீர்வு கொடுக்க உதவுகிறது. இது அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்றம் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு போன்றவற்றை விரட்டியடிக்க இது பல நன்மைகள் அளிக்கிறது. குறிப்பாக முழங்கால் வலியைக் குறைக்க ஒரு தேக்கரண்டி மஞ்சள் சேர்த்து சூடான பால் குடிக்கலாம். மறுபுறம், முழங்கால் வலியைக் குறைக்க மஞ்சளைத் தண்ணீரில் பேஸ்ட் செய்து உங்கள் முழங்காலில் தடவி மஞ்சளைப் பயன்படுத்தி வந்தால் வலி நிவாரணம் கிடைக்கும்.
ஐஸ்க்கட்டி:ஐஸ்க்கட்டி பயன்படுத்தி முழங்கால் வலிக்கு ஓரளவு குறைக்க முடியும். மேலும் இந்த நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம் இது திசுக்களுக்கு ஓய்வெடுக்க உதவுகிறது. உங்கள் முழங்காலை உயர்த்த 15 முதல் 20 நிமிடங்கள் குளிர்ந்த அழுத்தத்துடன் ஒரு ஐஸ்கட்டி பயன்படுத்தி பாதத்தை உயர்த்தினால் வலி குறையும்.
எலுமிச்சை:முழங்கால் வலியைக் குறைக்க எலுமிச்சை உதவியாக இருக்கும். எலுமிச்சை பழத்தில் சிட்ரிக் அமிலம் உள்ளன, இது கீல்வாதத்தின் போது உருவாகும் யூரிக் அமில படிகங்களைக் கரைக்க உதவுகிறது. மேலும் முழங்கால் வலி குறையும் வரை நீங்கள் தினமும் எலுமிச்சை சாற்றைப் பயன்படுத்தலாம்.
துளசி: மூலிகை இலையான துளசியில் பல மடங்கு நன்மைகள் கொட்டி கிடைக்கின்றன. இது முழங்கால் வலிக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. துளசியை ஒரு கப் தண்ணீரில் கொதி விட்டு பின்னர் வடிகட்டிய தண்ணீரைக் குடித்து வந்தால் வலி நிவாரணம் கிடைக்கும்.
கடுகு எண்ணெய்: சூடான கடுகு எண்ணெய் சில மணிநேரங்களிலே முழங்கால் வலியை எளிதில் குறைக்கலாம். வெட்டிய பூண்டில் கடுகு எண்ணெய்யைச் சேர்க்க வேண்டும். பின்னர் அதனை லேசான சூட்டில் சிறிது நேரம் கழித்து எண்ணெய்யால் வலி இருக்கும் இடத்தில் மசாஜ் செய்ய வேண்டும். இது உங்கள் முழங்கால் வலியைக் குறைக்க மிகவும் உதவியாக இருக்கும்.
இங்கே கொடுக்கப்படும் பயனுள்ள தீர்வுகளின் உதவியுடன் முழங்கால் வலியை வீட்டில் இருந்தேக் குறைக்கலாம். இந்த தீர்வுகளைப் பயன்படுத்துவதற்கு முன்பு நீங்கள் சிறந்த முடிவுகளுக்கு மிகவும் அனுபவம் வாய்ந்த மருத்துவர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், நிபுணர்களை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)