எவ்வளவு தான் டயட் இருந்தாலும், எவ்வளவு தான் உடற்பயிற்சி செய்தாலும் சிலருக்கு உடல் எடை குறையாது, அதற்கு நம்மை அறியாமல் செய்யும் சில விஷயங்கள் தான் காரணம்.
உங்கள் உடம்பில் உள்ள அதிகப்படியான கலோரிகளை வெளியேற்றினால் தான் உடல் எடை குறையும். எனவே நீங்கள் உடல் எடை குறைப்பிற்கான செயலில் ஈடுபட்டிருக்கும்போது குறைந்த அளவிலான உணவை உட்கொள்ளுங்கள் மற்றும் எப்போது பசிக்கிறதோ அப்போது மட்டுமே சாப்பிடுங்கள்.
உடல் எடையை குறைக்கவும், உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கவும் கார்டியோ பயிற்சிகள் பெரிதும் உதவுகிறது. ஆனால் அதிகளவில் கார்டியோ பயிற்சிகள் செய்தால் அதிகளவு உணவை உட்கொள்ள நேரிடும், இதனால் உங்கள் உடல் எடை குறையாது.
நீங்கள் எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பது முக்கியமல்ல அதில் எவ்வளவு ஊட்டச்சத்துக்கள் உள்ளது என்பது தான் முக்கியம். குறைந்த அளவு சாப்பிட்டாலும் ஊட்டச்சத்து நிரம்பிய உணவுகளை தான் சாப்பிட வேண்டும்.
புரத உணவு சாப்பிடுவது உங்களை நால்தோறும் முழுமையாக உணர வைக்கிறது, எனவே நீங்கள் சரியான அளவு புரத உணவை உட்கொள்ளாவிட்டால் உடல் எடை குறையாது.
உடற்பயிற்சியை முறையாக செய்யவேண்டியது அவசியம் அப்போது தான் உடலிலுள்ள கலோரிகள் எரிக்கப்படும். முறையாக உடற்பயிற்சி செய்யாவிட்டால் உடலை எடை குறையாது.