நீட்! மாணவி பிரதீபாவின் உடல் உறவினா்களிடம் ஒப்படைப்பு!

நீட் தேர்வில் ஏற்பட்ட தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட பிரதீபாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது!

Last Updated : Jun 5, 2018, 05:18 PM IST
 நீட்! மாணவி பிரதீபாவின் உடல் உறவினா்களிடம் ஒப்படைப்பு! title=

நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கைக்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று பிற்பகல் வெளியிடப்பட்டன. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 40% மாணவர்கள்தான் தேர்ச்சி பெற்றனர். 

இந்நிலையில் இந்த தேர்வில் தேர்ச்சி அடைய முடியாமல் தங்களது மருத்து படிப்பு கனவு பாழான நிலையில் மாணவ, மாணவிகள் தற்கொலை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. 

நீட் தேர்வில் தோல்வியைந்ததால் விழுப்புரம் மாணவி பிரதீபா விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர். பெருவளூர் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகள் பிரதீபா. இவர் பிளஸ் 2 தேர்வில் மாணவி பிரதீபா 1,125 மதிபெண்கள் எடுத்திருந்தார். இந்த நீட் தோ்வில் தோ்ச்சி பெற்று மருத்துவராகி விடலாம் என்ற கனவில் இருந்த பிரதீபாவுக்கு 39 மதிப்பெண்களே கிடைத்தது. 

அவரது உடல் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், நிவாரண உதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடா்பாக மேல் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தப்படும் என்று மாவட்ட ஆட்சித் தலைவா் உறுதி  அளித்தார். இதையடுத்து, பிரேதபரி சோதனைக்கு பிறகு பிரதீபாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது, மாணவி பிரதீபாவின் உடல் அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. 

Trending News