நிர்மலா டீச்சர் எனக்கு யாருனே தெரியாது -தமிழக ஆளுநர்!

மாணவிகளைத் தவறாக வழி நடத்த முயன்ற வழக்கில், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறியுள்ளார்.

Updated: Apr 17, 2018, 07:37 PM IST
நிர்மலா டீச்சர் எனக்கு யாருனே தெரியாது -தமிழக ஆளுநர்!
Zee Media

மாணவிகளைத் தவறாக வழி நடத்த முயன்ற வழக்கில், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறியுள்ளார்.

தவறான செயலுக்கு அழைக்கும் விதமாக மாணவிகளுடன் அருப்புக்கோட்டை உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்விவகாரத்தில் நிர்மலா தேவி மீதான குற்றச்சாட்டை விசாரிப்பதற்காக உயர்மட்ட விசாரணை குழுவை ஆளுநர் பன்வாரிலால் நியமித்துள்ளார். 

ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் தலைமையிலான அந்த விசாரணைக்குழு விரைவில் பேராசிரியையிடம் விசாரணை நடத்தும் எனத் தெரிகிறது. ஏற்கெனவே, போலீஸ் விசாரணை நடத்திவரும் நிலையில் ஆளுநரின் விசாரணை எதற்காக என ஸ்டாலின் உட்பட அரசியல் தலைவர்கள் சந்தேகம் எழுப்ப, அது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைக்கவே இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்தார். 

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடபாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செய்தியாளர்களிடம் பேசியதாவது...!  

அதில் அவரிடம், சர்ச்சைக்குரிய பேராசிரியை அந்த ஆடியோவில், ஆளுநரின் பெயரை குறிப்பிட்டது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், "அந்த பெண்ணை நான் இதற்கு முன் பார்த்ததே இல்லை. பாதுகாப்பு அதிகாரிகளை மீறி யாராலும் தன்னை நெருங்க முடியாது" என்று கூறினார். 

எந்த பாரபட்சமும் பார்க்காமல் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆர் சந்தானம் நடத்தும் விசாரணை முழுமையாக முடிக்கப்பட்டு, யாராக இருந்தாலும் குற்றவாளிகள் தண்டிக்கப் படுவார்கள் என்றும் கூறினார். 

நிகழ்ச்சியின்போது சிலர் அங்கேயும் இங்கேயும் வருவதுண்டு. அதை வைத்து சம்மந்தம் படுத்தக்கூடாது. அந்த பெண்மணி என்னை தாத்தா போன்றவர் என்றுதான் கூறியுள்ளார். எனக்கு பேரன், கொள்ளுக்பேரன், பேத்திகள் உள்ளனர்.

கமிட்டியின் அறிக்கையை தொடர்ந்து நடவடிக்கை இருக்கும். சிபிஐ விசாரணை தேவையில்லை. தேவைப்பட்டால் அமைக்கப்படும்’’ என்றார்.