தடையை உடைத்து கர்நாடகாவிலும் வெளியானது ரஜினியின் காலா!!

கர்நாடகா பெங்களூரு மந்த்ரி மாலில் ரஜினிகாந்த் நடித்த காலா படம் வெளியானது!! 

Last Updated : Jun 7, 2018, 02:51 PM IST
தடையை உடைத்து கர்நாடகாவிலும் வெளியானது ரஜினியின் காலா!!

கர்நாடகா பெங்களூரு மந்த்ரி மாலில் ரஜினிகாந்த் நடித்த காலா படம் வெளியானது!! 

கபாலி படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘காலா’. தனுஷ் தயாரித்துள்ள இந்தத் திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ரஜினியுடன் ஹியூமா குரேஷி, ஈஸ்வரி ராவ், சமுத்திரக்கனி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகி உள்ள இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது. தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட  திரையரங்குகளில் வெளியானது. மேலும் காலா திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள திரையங்குகளில் இன்று அதிகாலை  வெளியானது. உலகம்  முழுவதிலும் காலை 7 மணிக்கு முதல் காட்சி வெளியானது. காலா திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் தமிழகம்,  மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட இடங்களில் வெளியானது. 

இந்நிலையில், கர்நாடகாவில் காலா திரைப்படத்தை வெளியிடாமல் இருப்பதே நல்லது என அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி கூறியுள்ளார். மேலும், நான் ஐகோர்ட்டு உத்தரவை அமல்படுத்த வேண்டும். அது என்னுடைய பொறுப்பு. ஒரு தனிப்பட்ட நபரின் கணிப்பாக இப்படி ஒரு சூழ்நிலையில், தயாரிப்பாளர் மற்றும் வினியோகஸ்தர்கள் படத்தை வெளியிடாமல் இருப்பது நல்லது. வெளியிடுவதால் அதன் விளைவுகளை படத்தின் தயாரிப்பாளர் எதிர்க்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். 

இதையடுத்து, கர்நாடகா பெங்களூரு மந்த்ரி மாலில் ரஜினிகாந்த் நடித்த காலா படம் தற்போது வெளியானது!!

 

More Stories

Trending News