England: நீரெலிகள் உருவாக்கிய அற்புதமான அணை @Beavers

400 ஆண்டுகளில் இங்கிலாந்தின் எக்ஸ்மூர் (Exmoor) பகுதியில் நீர் எலிகள் (beavers) முதல் அணையை உருவாக்கியிருக்கின்றன.  400 ஆண்டுகளில் முதல் முறையாக, இங்கிலாந்தின் எக்ஸ்மூரில் நீரெலிகள் ஒரு அணையை கட்டமைத்து, சாதனை புரிந்துள்ளன. நீரெலி என்பது நீரிலும், நிலத்திலும் வாழும் விலங்கினம் ஆகும்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 30, 2020, 06:05 PM IST
England: நீரெலிகள் உருவாக்கிய அற்புதமான அணை @Beavers title=

'சுற்றுச்சூழல் பொறியாளர்கள்': 400 ஆண்டுகளில் இங்கிலாந்தின் எக்ஸ்மூர் (Exmoor) பகுதியில் நீர் எலிகள் (beavers) முதல் அணையை உருவாக்கியிருக்கின்றன.  400 ஆண்டுகளில் முதல் முறையாக, இங்கிலாந்தின் எக்ஸ்மூரில் நீரெலிகள் ஒரு அணையை கட்டமைத்து, சாதனை புரிந்துள்ளன. நீரெலி என்பது நீரிலும், நிலத்திலும் வாழும் விலங்கினம் ஆகும்.
 
நீரெலிகளை இப்பகுதியில் National Trust கொண்டு வந்து விட்டது. நீரெலிகள் இப்பகுதியில் சீரமைப்பு பணிகளையும் மேற்கொள்கின்றன. இங்கிலாந்தின் மைன்ஹெட் (Minehead) அருகே உள்ள ஹோல்னிகோட் எஸ்டேட்டில் (Holnicote Estate) இந்த அணை காணப்பட்டது. 125 ஆண்டுகளில் முதல்முறையாக இந்த வனப்பகுதிக்குள் National Trust விட்ட நீரெலிகள் இவை. 

அணை உருவாக்கும் பணியில் தாவரங்களை சேகரிப்பதும் ஒரு பகுதியாகும்.   ஜனவரி மாதத்தில் இவை 2.7 ஏக்கர் பரப்பளவில் உள்ள வனப்பகுதிக்குள் விடப்பட்ட பிறகு, அறக்கட்டளை, எக்ஸிடெர் பல்கலைக்கழகத்துடன் (Exeter University) இணைந்து அவற்றைக் கண்காணித்து வருகிறது நேஷனல் டிரஸ்ட் (National Trust).

உள்ளூர் தொழிலாளர்கள் மற்றும் ரேஞ்சர்கள் இந்த நீரெலிகளை "சுற்றுச்சூழல் அமைப்பு பொறியாளர்கள்" என்று குறிப்பிட்டுள்ளதாக ஸ்கைநியூஸ் (SkyNews) செய்தி கூறுகிறது. தெரிவித்துள்ளது. ஆழமான நீர் குளங்களை நீரெலிகள் உருவாக்கியுள்ளன. இது விலங்குகளுக்கு, பிற மிருகங்களிடமிருந்து பாதுகாப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல், உணவை பதுக்கி வைப்பதற்கு பாதுகாப்பான இடத்தையும் வழங்குகிறது.

Read Also | Lunar Eclipse: இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இன்று

நீரெலிகள் உருவாக்கும் இந்த கட்டுமானத்தின் பலன்கள் மனிதர்களுக்கும் கிடைக்கிறது. நீரெலிகள் உருவாக்கும் அணைகள் வெள்ளத்தைத் தடுக்கும் திறன் கொண்டவை, ஏனெனில் அவை நீரோடையில் பாயும் தண்ணீரை சேமித்து வைக்கின்றன.  இந்த திட்டம் குறித்து ஸ்கை நியூஸிடம் பேசிய திட்ட மேலாளர் பென் எர்ட்லி (Ben Eardley), தற்போதைய காலநிலை நெருக்கடி காரணமாக மோசமாகி வரும் சுற்றுச்சூழலுக்கு நீரெலிகள் உருவாக்கும் அணை பயனுள்ளதாக தீர்வுகளில் ஒன்றாக இருக்கும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.  

இந்த அணையை "நம்பமுடியாத சிறப்பு" என்று சொல்லி சிலாகிக்கும் Ben Eardley, இத்தகைய அணைகளின் தோற்றம் மாறிவரும் நிலப்பரப்புக்கு சான்றாகும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். இந்த இடத்தில் அணை உருவாகி ஒரு சில வாரங்கள் மட்டுமே ஆனாலும், ஒரு ஈரநிலத்தை அது உருவாக்கியுள்ளது.  அதுமட்டுமல்ல, மீன் கொத்தி (Kingfisher) பறவையையும் கண்டதாக எர்ட்லி கூறுகிறார். பல்வேறு பறவைகள், பூச்சிகள், வெளவால்கள் மற்றும் உயிரினகளும் இங்கு வரக்கூடும் என்று திட்டக் குழுவினர் நம்புகின்றனர்.  

அண்மையில் இப்பகுதியில் பெய்த மழையைப் பற்றி குறிப்பிட்டுச் சொல்லும் எர்ட்லி, நிலப்பரப்பை ஒழுங்கமைக்க நீரெலி வகித்த பங்கிற்கு இதுவொரு சான்றாகும் என்கிறார்.

16 ஆம் நூற்றாண்டில், இங்கிலாந்தில் நீரெலிகள் அழிந்துபோய்விட்டன.  உரோமம், இறைச்சி மற்றும் வாசனை திரவியங்களுக்காக நீரெலிகள் கண்மூடித்தனமாக வேட்டையாடியதால் அவற்றின் இருப்பு அருகிப் போனது. கடந்த 20 ஆண்டுகளில், நீரெலிகள் மீண்டும் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

நீரெலிகள் அணையை உருவாக்கும் என்ற இந்தவொரு சிறு செய்தி, சுற்றுச்சூழல் கட்டமைப்பில் ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஏதாவது ஒரு பங்கு இருக்கிறது என்பதை மெய்ப்பிக்கும் உதாரணமாக இருக்கிறது.

Read Also | 5G உங்களுக்கும் அலர்ஜியாகலாம் தெரியுமா? இதோ உதாரணம்..

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News