கொரோனா வைரஸ் (Corona Virus) பரவத் தொடங்கியதிலிருந்து, பலர் இந்த வைரஸின் முக்கிய மூலமாக வெளவால்களைக் (Bats) கருதுகின்றனர். கொரோனா மட்டுமல்ல, வெளவால்கள் பல வகையான வைரஸ்களுக்கு காரணமாக இருப்பதாக நம்பப்படுகிறது. ஆனால், அனைவரையும் சிந்திக்கச் செய்யும் மற்றொரு கேள்வி என்னவென்றால், மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கு, குறிப்பாக வெளவால்களுக்கு கொரோனா வைரஸ் பரவ முடியுமா என்பதுதான்.
விஞ்ஞானிகளின் ஒருமித்த கருத்து என்னவென்றால், இந்த வைரஸ் சீனா அல்லது அண்டை நாடுகளில் உள்ள வெளவால்களிலிருந்து தோன்றியது என்பதுதான்.
மனிதர்களுக்கு பரவுகின்ற கொரோனா வைரஸ் அல்லது பிற வைரஸ்கள் வெளவால்களிலும் உள்ளன என்றும் ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்தனர். ஆனால் வைரஸ் மனிதர்களிடமிருந்து வௌவால்களை சென்றடையுமா என்பதில் இன்னும் தெளிவு இல்லை. அமெரிக்க புவியியல் ஆய்வு மற்றும் மீன் மற்றும் காட்டு மிருகங்களுக்கான சேவை வையம் ஆகியவை வெளவால்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. இந்த இரண்டு ஏஜென்சிகளும் இந்த விஷயத்தை மிகவும் தீவிரமானதாகக் கருதி, SARS-CoV-2 வைரஸ் மனிதர்களிடமிருந்து வௌவால்களுக்கு பரவுமா என்பது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆராய்ச்சியின் துணைத் தலைவரான கெவின் ஆலிவ் கூறுகையில், இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவத் தொடங்கியதும், இது வட அமெரிக்காவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள மக்களை பாதிக்கக்கூடும் என்ற கவலை உருவாகியது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு ஆராய்ச்சியாளர் இந்த குழுவில் இருந்தார். பல வௌவால்கள் அவர் மூலம் தொற்றுக்கு ஆளாகி இருக்கக்கூடுமோ அன்ற அச்சம் ஆய்வாளர்களுக்கு அதிகரித்தது. பல ஆய்வுகளுக்குப் பிறகு, இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்கள், மனிதர்களில் இருக்கும் கொரோனா வைரஸால் வெளவால்களில் தொற்று பரவும் அபாயம் இருப்பதாக முடிவு செய்தனர். தனித்தனியே இந்த ஆய்வில் ஈடுபட்ட இரண்டு நிறுவனங்களின் ஆராய்ச்சி இந்த ஆபத்தை புறக்கணிக்க முடியாது என்று கூறுகின்றன.
கூடுதலாக, கொரோனா வைரஸ் (Corona Virus) வெளவால்களிலிருந்து மற்ற வனவிலங்குகள் அல்லது செல்லப்பிராணிகளுக்கு எவ்வளவு விரைவாக பரவுகிறது என்ற கவலையும் உள்ளது. வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள், பூனைகள், பறவைகள் ஆகியவை இதில் அடங்கும். வீட்டு பூனைகள், காட்டு பூனைகள் இவையும் பாதிக்கப்படலாம் என்பதை விஞ்ஞானிகள் ஏற்கனவே நிரூபித்துள்ளனர். பல நாடுகளில் பல செல்லப் பிராணிகள் தொற்றை பரப்பக்கூடுமோ என்ற அச்சத்தில் கொல்லப்பட்டன.
சிலர் செல்லப்பிராணிகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டது. சி.டி.சி பின்னர் செல்லப்பிராணிகளிடமிருந்து கொரோனா வைரஸ் (Corona Virus) தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று கூறியது. ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தால், அவர் தனது குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களுக்கு எடுக்கும் அதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வீட்டில் உள்ள செல்லப்பிராணிகளிடமும் எடுக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். மனிதனும் விலங்குகளுக்கு தொற்றை பரப்பலாம்!!
ALSO READ: COVID-19 தோற்றத்தைக் கண்டறிந்த WHO ஆய்வு குழு?... ஆய்வாளர்கள் கூறுவது என்ன?