கொரோனாவின் நான்காவது அலை வரும் என்ற கணிப்புகள் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.
2019ஆம் ஆண்டில் சீனாவில் தொடங்கி, உலகம் முழுவதும் பரவி, அலையலையாய் அலைகழிக்கும் கொரோனாவின் மூன்று அலைகள் இந்தியாவை பாடாய் படுத்தி வைத்த நிலையில், நான்காம் அலை வரும் என்ற தகவல்கள் கவலைகளை அதிகரிக்கின்றன.
ஜூன் மாதத்தில் கொரோனாவின் நான்காவது அலை வரலாம் என்று எச்சரிக்கை விடுக்கும் ஆய்வாளர்கள், அது எப்போது உச்சத்தை எட்டும்? எப்போது அடங்கும் என்பது குறித்த கணிப்புகளையும் வெளியிட்டுள்ளனர்.
மூன்று கோவிட் அலைகளால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியா, இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் நான்காவது அலைக்கு பலியாகலாம்.
மேலும் படிக்க | கொரோனாவுக்கு எதிரான ‘யூனிவர்சல் சூப்பர் தடுப்பூசி’ சாத்தியமா
டிசம்பர் 2021 முதல் ஜனவரி 2022 வரையிலான ஒமிக்ரான் (Omicron) மாறுபாட்டிற்குப் பிறகு, இந்தியாவில் கொரோனாவின் மூன்றாவது அலை பெரிய அளவில் ஆபத்தை ஏற்படுத்தவில்லை.
ஆனால் இரண்டாம அலையின் கடுமையான பாதிப்புகளை அடுத்து, ஒமிக்ரான் பரவலின்போது, கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் உறுதியான நடவடிக்கைகளும் ஆபத்தை பெருமளவு குறைக்க உதவின.
சமீபத்தில் கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தின் (IIT-K) ஆராய்ச்சியாளர்கள் நாட்டில் நான்காவது அலை உருவாகும் என்று கணித்துள்ளனர்.
மேலும் படிக்க | சிறுநீரகத்தை டேமேஜ் செய்யும் இந்த '5' உணவுகளை தவிர்க்கலாமே
ஜூன் மாதத்தில் கொரோனாவின் நான்காவது அலை வரலாம்
ஐஐடி கான்பூரில் உள்ள விஞ்ஞானிகள் கோவிட்-19 இன் நான்காவது அலை ஜூன் 22 ஆம் தேதி திரும்பக்கூடும் என்று எச்சரித்துள்ளனர். ஆய்வின்படி, இந்தியாவில் ஜூன் மாதத்தில், நாடு மீண்டும் கொரோனாவின் பிடியில் சிக்கக்கூடும்.
நான்காம் அலையும், கொரோனா வழக்குகளின் அதிகரிப்பும் சுமார் நான்கு மாதங்களுக்கு தொடர வாய்ப்புள்ளது.
நான்காம் அலையின் தீவிரம் எப்படி இருக்கும்?
ஆய்வின்படி, நாட்டில் அடுத்த அலையின் தீவிரம் புதிய மாறுபாட்டின் வருகை, தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை மற்றும் கொடுக்கப்பட்ட பூஸ்டர் டோஸ் ஆகியவற்றைப் பொறுத்தது.
மேலும் படிக்க | ஸ்ருதிஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி!
ஆராய்ச்சியாளர்கள் என்ன சொல்கிறார்கள்?
இந்த ஆய்வை மேற்கொண்டவர்களில் மூத்த விஞ்ஞானிகள் ஷலப், சப்ரா பிரசாத் ராஜேஷ்பாய் மற்றும் சுப்ரா சங்கர் தார், ஐஐடி கான்பூரில் உள்ள கணிதவியல் துறை பேராசிரியர்கள். ஜிம்பாப்வேயின் தரவுகளின் அடிப்படையில் காஸியன் விநியோகங்களின் கலவை ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டது.
இந்த IIT-K ஆய்வு MedRive சஞ்சிகையில் வெளியிடப்பட்டது, இந்த ஆராய்சி இன்னும் முழுமையாக மதிப்பாய்வு செய்யப்படவில்லை.
ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, நான்காவது அலை ஜூன் 22, 2022 இல் தொடங்கி, ஆகஸ்ட் 23, 2022 அன்று அதன் உச்சத்தை எட்டும். அக்டோபர் 24, 2022 இல் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | மறதி, குழப்பம் அதிகமா? Vitamin B குறைபாடு இருக்கலாம்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR