புதுடெல்லி: உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட பினாக்கா மல்டி பீப்பல் ராக்கெட் லாஞ்சர் (எம்பிஆர்எல்) அமைப்பின் மேம்படுத்தப்பட்ட பதிப்பை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்தது
அடுத்தடுத்து துரிதமாக ஆறு ராக்கெட்டுகள் ஏவப்பட்டன, சோதனை முழுமையான பணி நோக்கங்களை பூர்த்திசெய்தது என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
ஒடிசா கடற்கரையில் சண்டிப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த டெஸ்ட் ரேஞ்சில் (ஐ.டி.ஆர்) (Integrated Test Range (ITR)) இருந்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
முந்தைய பதிப்புடன் எம்.கே -1 (Mk-1), ஒப்பிடும்போது குறைக்கப்பட்ட நீளத்துடன் நீண்ட தூரத்தைக் கொண்டுள்ளது இந்த புதிய ராக்கெட் அமைப்பு. என்று டி.ஆர்.டி.ஓ கூறுகிறது. ஆயுத ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (ஏ.ஆர்.டி.இ) மற்றும் உயர் ஆற்றல் பொருட்கள் ஆராய்ச்சி ஆய்வகம் (ஹெச்.எம்.ஆர்.எல்) (High Energy Materials Research Laboratory (HEMRL)) ஆகியவை இணைந்து இந்த ராக்கெட்டை வடிவமைத்துள்ளன. புனேவைச் சேர்ந்த ஆய்வகங்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
ஆயுதத்தின் மேம்பட்ட பதிப்பு, 45 கி.மீ.க்கு அப்பால் உள்ள இலக்குகளை அழிக்கும் வல்லமை பெற்றதாக இருக்கும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR