அமெரிக்க தேர்தல் முடிவுகளை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த ஆரவார அதிபர் தேர்தல் போட்டிக்கு மத்தியில் முன்னாள் அதிபரின் வீடியோ ஒன்று வைரலாகி நிலைமையின் சூட்டை தணித்துள்ளது.
பராக் ஒபாமா அமெரிக்காவின் அதிபராக பதவில் இருந்தபோது, துணை அதிபராக ஆட்சியின் போது துணை அதிபராக பதவி வகித்த டெமாக்ரெடிக் கட்சி வேட்பாளார் ஜோ பைடனை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா. மிச்சிகன் மாகாணத்தில் நடைபெற்ற பிரசாரத்தின் போது பராக் ஒபாமா என்ன செய்தார் தெரியுமா?
59 வயதாகும் பாரக் ஒபாமா, அருகில் இருந்த கூடைப்பந்தாட்ட மைதானத்திற்கு சென்று கார்னர் ஷாட் அடித்தார்.
so this was absolutely insane pic.twitter.com/W4JL6LQZxq
— Olivia Raisner (@OliviaRaisner) October 31, 2020
அந்த வீடியோ வெறும் 20 விநாடிகள் கொண்டது என்றாலும், அதுவே தற்போது சமூக வலைதளங்களில் ஹிட்டடிக்கும் வைரல் வீடியோ.
பராக் ஒபாமாவின் சுறுசுறுப்பையும், உடல்தகுதியையும் பார்த்து ரசித்தவர்களின் எண்ணிக்கைக்கும் பஞ்சமில்லை. இந்த 20 விநாடி வீடியோவை கிட்டத்தட்ட 16 மில்லியன் மக்கள் கண்டு ரசித்துள்ளனர்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR