குறைந்த புவியீர்ப்பு விசையால் விண்வெளிப் பயணம் விண்வெளி வீரர்களின் மூளையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. விண்வெளியில் பயணிக்கும் மனிதர்களின் உடல் பல்வேறு மாறுதல்களுக்கு உட்படுகிறது. அவை பல வேறுபட்ட சிரமங்களை கடக்க வேண்டும், விண்வெளிக்கு செல்லும் வீரர்களின் மூளையிலும் அது தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
ஃபிரான்டியர்ஸ் இன் நியூரல் சர்க்யூட்ஸ் இதழில் நேற்று (2022, பிப்ரவரி 18 வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, விண்வெளி வீரர்களின் மூளை கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் விண்வெளியில் செலவழித்த பிறகு பூமிக்குத் திரும்பிய சில மாதங்களில் மாறியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி மற்றும் ரஷ்யாவின் ரோஸ்கோஸ்மோஸ் ஆகியவற்றில் இருந்து 12 விண்வெளி வீரர்களின் MRI ஸ்கேன்களை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டனர்.
இந்த விண்வெளி வீரர்கள் சராசரியாக 172 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்தனர், அவர்கள் புறப்படுவதற்கு முன்பும், அவர்கள் திரும்பிய உடனேயே, ஃபைபர் டிராக்டோகிராபி எனப்படும் மூளை இமேஜிங் நுட்பத்தைப் பயன்படுத்தி MRI ஸ்கேன்கள் எடுக்கப்பட்டன.
அதன்பிறகு சிலருக்கு அவர்கள் பூமிக்குக் திரும்பிய ஏழு மாதங்களுக்குப் பிறகு இறுதி ஸ்கேன் செய்தனர்.
மேலும் படிக்க | ரஷ்யா படைகளை வாபஸ் பெறவில்லை என அமெரிக்கா குற்றசாட்டு
மூளையின் ஒரு பகுதியான கார்பஸ் கால்சோம், உறுப்பின் இரண்டு அரைக்கோளங்களை இணைத்து, "தகவல் தொடர்பு வலையமைப்பாக" செயல்படுகிறது, திரவத்தால் நிரப்பப்பட்டு, விண்வெளிப் பயணத்தின் விளைவாக வளர்கிறது,
ஆனால் இது "உண்மையான கட்டமைப்பு மாற்றம்" என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். விண்வெளி வீரர்கள் மீது விண்வெளிப் பயணத்தின் பிற விளைவுகள் தொடர்பாக விரிவாக ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன.
விண்வெளியில் நீண்ட நேரம் செலவழித்தால் விண்வெளி வீரர்கள் சந்திக்கும் ஐந்து முதன்மையான ஆபத்துக்களை நாசாவில் உள்ள மனித ஆராய்ச்சித் திட்டம் கண்டறிந்துள்ளது:
மேலும் படிக்க | அடுத்த கட்டத்துக்கு செல்லும் உக்ரைன் ரஷ்யா விவகாரம்:
தனிமைப்படுத்தல் மற்றும் அடைந்து இருப்பது அவர்களின் மனநிலையை பாதிக்கலாம். அடுத்ததாக தூக்கக் கோளாறுகள் மற்றும் மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உண்டு.மேலும், புதிய உணவின் பற்றாக்குறையால் ஊட்டச்சத்து குறைபாடும் ஏற்படலாம்.
பூமியில் இருந்து வெகுதொலைவுக்கு செல்லும் நிலையில், விண்வெளி வீரர்கள் தாங்களாகவே எந்தவொரு சுகாதார அவசரநிலையையும் கையாள வேண்டும் என்பதும் மற்றுமொரு ஆபத்து.
இதயம், எலும்புகள் மற்றும் தசைகளை பாதிக்கும் ஈர்ப்பு புலங்களில் மாற்றம் ஏற்படுவதும், ஒருவரை மரணத்திற்கு இட்டுச் செல்லக்கூடிய அபாயகரமான சூழல் ஏற்படுவதும் விண்வெளி வீரர்கள் நீண்ட காலம் விண்வெளியில் இருப்பதன் பக்கவிளைவுகளாக இருக்கும்.
தசை அட்ராபி (Muscle atrophy) ஒரு குறிப்பிடத்தக்க பிரச்சினையாக இருக்கும். நாசாவின் கூற்றுப்படி, ஐந்து முதல் பதினொரு நாட்கள் விண்வெளியில் செலவிடும் விண்வெளி வீரர்கள் தங்கள் தசையில் (muscle mass) 20% இழக்கிறார்கள்.
மேலும் படிக்க | Cyber Attack: கத்தியின்றி ரத்தம் சிந்த வைக்கும் சைபர் தாக்குதல்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR