தலையில்லாம உயிருடன் இருக்க முடியுமா? முடியும் என்று சொல்லும் நம்ம வீட்டு செல்லம்

ஒரு உயிரினம் தலை இல்லாமல் வாழ முடியும்! ஆனால் எப்படி சுவாசிக்கும்?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 27, 2022, 12:20 PM IST
  • கரப்பான் பூச்சி ஒரு வாரம் வரை தலையில்லாமல் உயிர் வாழும்
  • கரப்பான் பூச்சி தாகத்தால் இறக்கிறது
  • இயற்கையின் அதிசயத்திற்கு பின்னால் உள்ள அறிவியல்
தலையில்லாம உயிருடன் இருக்க முடியுமா? முடியும் என்று சொல்லும் நம்ம வீட்டு செல்லம் title=

புதுடெல்லி: தலை இல்லாமல் வாழ்வதைப் பற்றி நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.   ஆனால், தலை இல்லாமல் சுமார் ஒரு வார காலம் வாழக்கூடிய உயிரினம் பூமியில் இருப்பது உண்மைதான். இந்த உயிரினத்தின் பெயர் கரப்பான் பூச்சி. 

இந்த உயிரினத்தின் உடல் அமைப்பு தலை இல்லாமல் ஒரு வாரம் வாழும்படி அமைந்துள்ளது. கரப்பான் பூச்சிகள் தலை இல்லாமல் ஒரு வாரம் வரை வாழக்கூடியவை.  உண்மையில், இயற்கையின் இந்த அதிசயத்திற்கு பின்னால் அறிவியல் உள்ளது.

கரப்பான் பூச்சியின் உடல் ஒரு சிறப்பு அமைப்பு கொண்டது
கரப்பான் பூச்சியை வடிகால் அருகிலோ, சமையலறையிலோ, குளியலறையிலோ ஒரு முறையாவது பார்த்திருப்பீர்கள், அது தலை இல்லாமல் ஒரு வாரம் வாழலாம் என்று நினைத்திருக்கிறீர்களா? இது கரப்பான் பூச்சியின் உடலின் சிறப்பு அமைப்பு காரணமாகும்.

creature

தலை இல்லாமல் சுவாசிக்க முடியும்
கரப்பான் பூச்சி தலை இல்லாமல் ஒரு வாரம் உயிர் வாழ்வதற்குக் காரணம், அதன் உடலில் உள்ள திறந்த இரத்த ஓட்ட அமைப்புதான்.

கரப்பான் பூச்சியின் உடலில் சிறிய துளைகள் உள்ளன, அதன் மூலம் அவை சுவாசிக்கின்றன. எனவே கரப்பான் பூச்சி உயிருடன் வாழ அதற்கு தலை தேவையில்லை.  

மேலும் படிக்க | Zomato கொடுத்த அதிர்ச்சி! இலவசமாக கிடைத்த கரப்பான் பூச்சி

கரப்பான் பூச்சிகள் இறப்பதற்கு இதுதான் காரணம்?
தலையில்லாமல் வாழ கரப்பான் பூச்சியால் வாழ முடிந்தாலும், கரப்பான் பூச்சியின் மரணத்திற்கு காரணமும் ஆச்சரியமானது.

தாகத்தால் தான் கரப்பான் பூச்சி இறக்கிறது ஏனென்றால் தலையை இழந்தாலும் சுவாசிக்க முடிந்த கரப்பான் பூச்சிக்கு தண்ணீர் குடிக்க முடியாது. எனவே, உடலில் இருக்கும் நீர்ச்சத்து தீர்ந்தவுடன் அது இறந்துவிடும்.

காரணம், கரப்பான்பூச்சியின் நீர் அருந்தும் உறுப்பு அதன் தலைப் பகுதியில் தான் இருக்கிறது. தலை கழன்றதும், தண்ணீர் குடிக்க முடியாமல் கரப்பான் பூச்சி தாகத்தால் இறந்துவிடும்.

மேலும் படிக்க | வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லையா? சில யோசனைகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News