விஜய்சேதுபதியின் '96' திரைப்படம் அடுத்தமாதம் வெளியாகிறது!

விஜய்சேதுபதி, திரிஷா நடிப்பில் உருவாகி வரும் '96' திரைப்படம் வரும் அக்டோபர் 4-ஆம் நாள் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்!

ZEE Web Team (Tamil) ZEE Web Team (தமிழ்) | Updated: Sep 11, 2018, 07:16 PM IST
விஜய்சேதுபதியின் '96' திரைப்படம் அடுத்தமாதம் வெளியாகிறது!
Pic Courtesy: twitter/@VijaySethuOffl

விஜய்சேதுபதி, திரிஷா நடிப்பில் உருவாகி வரும் '96' திரைப்படம் வரும் அக்டோபர் 4-ஆம் நாள் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்!

`நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சி.பிரேம்குமார் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் 96. இப்படத்தில் திரிஷா மற்றும் விஜய் சேதுபதி முதல் முறையாக ஜோடியாக நடிக்கின்றனர். 

காதலை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்தில் விஜய்சேதுபதி அவர்கள் 16 வயது, 36 வயது மற்றும் 96 வயது என மூன்று கெட்டப்புகளில் நடிக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இப்படத்தில் ஜனகராஜ், காளி வெங்கட், வினோதினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். முன்னதாக இப்படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் இத்திரைப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வம் காண்பித்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது இத்திரைப்படமானது அடுத்தமாதம் 4-ஆம் நாள் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்!