விஜய்சேதுபதி-யின் Super Deluxe திரைப்பட First Look வெளியானது!

நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தின் First Look போஸ்டரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

Written by - ZEE Bureau | Last Updated : Oct 8, 2018, 06:03 PM IST
விஜய்சேதுபதி-யின் Super Deluxe திரைப்பட First Look வெளியானது!

நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தின் First Look போஸ்டரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

‘ஆரண்யக் காண்டம்’ திரைப்பட இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி திருநங்கையாக நடிக்கும் திரைப்படம் சூப்பர் டீலக்ஸ். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதல்முறையாக திருநங்கை கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இந்த திரைப்படத்தில் படத்தில் மலையாள படத்தின் முன்னணி ஹீரோ பகத் பாசில், நடிகைகள் சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, இயக்குனர் மிஷ்கின் உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகின்றார்.

படத்தின் திரைகதை குறித்த தகவல்கள் ரகசியமாக காப்பாற்றப்பட்டு வருகின்றது. எனினும் விஜய் சேதுபதி ஷில்பா என்னும் கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றார் என்பது மட்டும் அனைவரும் அறிந்த விஷயம்.

படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் தற்போது இப்படத்தின் First Look போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது... “இதோ எனக்கு ரொம்ப பிடிச்ச டைரக்கர் தியாகராஜன் குமாரராஜா-வோட சூப்பர் டீலக்ஸ் படத்தோட FirstLook” என குறிப்பிட்டுள்ளார்!

More Stories

Trending News