Viral Video: பெண் மயிலை மயக்க ஆண் மயில் ஆடும் ஒயிலாட்டம்!

தோகை விரித்து ஆடும் மயிலை ரசிக்காதவர்கள் இருக்க முடியுமா என்ன. பொதுவாக, ஆண்மயில் பெண் மயிலைக் கவர்வதற்காக தோகையை விரித்து ஆடும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 5, 2022, 05:08 PM IST
  • தோகையை விரித்து ஆடும் போது மயில் கூக்குரலும் எழுப்புகிறது. ஆனால் அது இனிமையாக இருக்காது.
  • பெண் மயில் மீதான ஆசையை தனது கூக்குரல் மூலம் உணர்த்தும் ஆண் மயில்.
  • மழை வரும் முன்னரும் மயில்கள் தோகை விரித்து நடனமாடும்.
Viral Video:  பெண் மயிலை மயக்க ஆண் மயில் ஆடும் ஒயிலாட்டம்! title=

இந்தியாவின் தேசிய பறவையாக இருக்கும் மயில்கள் மிகவும் கவர்ச்சியான பறவை என்றால் மிகையில்லை. தோகை விரித்து ஆடும் மயிலை ரசிக்காதவர்கள் இருக்க முடியுமா என்ன. மயில்களில் ஆண்மயில் தனது அழகான தோகைக்காக பெயர் பெற்றது. பொதுவாக, ஆண்மயில் பெண் மயிலைக் கவர்வதற்காக தோகையை விரித்து ஆடும். இதன் தோகையில் வரிசையாக இருக்கும் 'கண்' போன்ற வடிவங்கள், தோகையை விரிக்கும் போது மிகவும் அழகாகத் தோற்றமளிக்கும்.

வைரல் ஆகும் வீடியோவில், இந்த ஆண் மயிலின் அழகான அசைவுகளை பெண் மயில் ரசிக்காமல் இருக்க முடியும் என தோன்றவில்லை.  அதில் ஆண் மயில் ஒன்று பெண் மயிலை கவர தோகையை விரித்து, அசைத்து ஆடும்போது அதன் அழகான இறக்கைகள் கீழ்நோக்கி வளைகின்றன. அதன் இறகுகளோ சலசலவென்ற ஓசை எழுப்புகின்றன.

மேலும் படிக்க | Viral Video: மயில் தோகை விரித்து ஆடி பார்த்திருப்பீங்க; பறந்து பார்த்திருக்கீங்களா!

வைரலாகும் மயில் ஆட்டத்தை கீழே காணலாம்:

பெண் மயிலை கவர முதலில், ஆண் மயில் தனது நீண்ட தோகையை விரித்து, நளினமான நடனத்தை அரங்கேற்றும். பொதுவாக தோகையை விரித்து ஆடும் போது மயில் கூக்குரலும் எழுப்புகிறது. ஆனால் அது இனிமையாக இருக்காது. ஆனாலும் அது பெண் மயில் மீதான ஆசையை தனது கூக்குரல் மூலம் உணர்த்தும்.

பெண் மயிலை கவர்வதைத் தவிர மழை வரும் முன்னரும் மயில்கள் தோகை விரித்து நடனமாடும். சில சமயங்களில் எதிரிகளை அச்சுறுத்தவும் தோகையை விரித்து, வேகமாக அசைத்து, ஒலி எழுப்பி பயமுறுத்தும். ஆங்கிலத்தில் மயிலின் பொதுப்பெயர் பீபௌல் (Peafowl) என்பதாகும். ஆண் மயிலினை பீக்காக் (peacock) என்றும், பெண் மயிலினை பீஹென் (peahen) என்றும் அழைக்கிறோம்.

மேலும் படிக்க | குட்டி யானைக்கு குசும்பு ஜாஸ்தி தான்... வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வீடியோ!

மேலும் படிக்க | Viral Video: காப்பாற்றிய பெண்ணிற்கு 'நன்றி' கூறிய குட்டி யானை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News