இங்கிலாந்துக்கு எதிரான டி20 அணியில் இலங்கையின் இரு-கை பந்துவீச்சாளர் கமிந்து மின்டீஸ் இடம்பிடித்துள்ளார்!
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 ஒருநாள், 1 டி20 மற்றும் 3 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. தற்போது இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் நடைப்பெற்று வரும் நிலையில் வரும் அக்டோபர் 27-ஆம் நாள் டி20 போட்டி நடைபெறுகிறது.
Sri Lanka T20I squad for England match released! #SLvENG
Thisara Perera - Capt
D Chandimal
N Dickwella
Kusal Perera
Kusal Mendis
Dhananjaya De Silva
D Shanaka
Kamindu Mendis
I Udana
L Malinga
D Chameera
A Dhananjaya
K Rajitha
N Pradeep
L Sadakan https://t.co/ef8TsmwNRK pic.twitter.com/PVDKgrlt83— Sri Lanka Cricket (@OfficialSLC) October 22, 2018
இப்போட்டியில் பங்கேற்கும் 15 வீரர்களின் பெயர் பட்டியலினை இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் இரு-கை பந்துவீச்சாளர் கமிந்து மின்டீஸ் இடம்பிடித்துள்ளார்.
U-19 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது இலங்கை அணியின் தலைமை பொறுப்பு வகித்தவர் கமிந்து மின்டீஸ். சுழற்பந்து வீச்சாளரான இவர் தனது இரு-கைகளாலும் ஒத்த திறனுடன் பந்துவீசும் திறன் கொண்டவர்.
Kamindu Mendis, Sri Lanka's captain during January's U19 @CricketWorldCup, has been called up to his country's T20I squad for the first time.
Here's a clip of him in action - and no, that's not a mirror, he really does bowl both right-arm and left-arm spin! pic.twitter.com/rhjJP4wku1
— ICC (@ICC) October 23, 2018
U-19 உலக கோப்பையின் போது தனது திறமையினை உலகிற்கு வெளிப்படுத்திய மின்டீஸ் தற்போது மூத்த அணியில் இடம்பிடித்துள்ளார். விரைவில் இவர் தனது திறமையினால் இலங்கை அணியின் முக்கிய வீரராக இடம்பிடித்து வலம் வருவார் என இங்கிலாந்து அணியின் மொயின் அலி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.