பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் பொருந்தும். தொந்தரவு ஒரு எல்லைக்கு மேல் சென்றால், அவற்றின் பின்விளைவுகளை சந்தித்தே ஆக வேண்டும். குறும்புக்காரர்கள் தான் இத்தகைய குசும்பு விளையாட்டுகளை செய்து பின்னர் அடி உதை வாங்கிக் கொண்டு வந்து உட்காருவார்கள். விளையாடுகிறோம் என்ற பெயரில் ஒருவரை தொந்தரவு செய்வது என்பது அபத்தமானது. அதனை புரிந்து கொள்ளாவிட்டால், தொந்தரவுக்கு உள்ளானவர்கள் புரிய வைத்துவிடுவார்கள். அப்படியான தரமான செய்கை வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியிருக்கிறது.
மேலும் படிக்க | அட பச்ச கிழவி டா டேய்..ஏமாந்து போன காதலன்: வீடியோ வைரல்
குரங்கிடம் வம்பிழுத்தவர், வாங்கிக் கட்டிக்கொண்ட சம்பவம் நகைப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. அந்த வீடியோவில் குரங்கு ஒன்று அமைதியாக அமர்ந்திருக்கிறது. அதனை பார்த்த சிறுவன், வம்பிழுக்கிறான். அருகில் சென்று பயமுறுத்துவது போல் விளையாட்டு காண்பிக்க, முடிந்தளவுக்கு அதவும் பொறுமை காக்கிறது. ஆனால், சிறுவனின் சீண்டல் அதிகரிக்க, பொறுமை இழந்த குரங்கு ஒரு கட்டத்தில் தன்னுடைய கோபத்தை லேசாக வெளிப்படுத்துகிறது. இதனை புரிந்து கொண்டாவது சிறுவன் நகர்ந்திருக்கலாம். அவன் அதை செய்யவில்லை.
மனசுல பெரிய மைக் டைசன்னு நினைப்பா...
யாருக்கிட்ட.. pic.twitter.com/lKTdjTgp7L— சிந்தனைவாதி (@PARITHITAMIL) October 15, 2022
இதனால் கடைசியில் குரங்கு தன் சேட்டையை காண்பித்துவிடுகிறது. கடிக்க வருவதுபோல் பாவணை செய்துவிட்டு நொடியில் காலைக் கொண்டு பாய்ந்து வந்து உதைத்துவிட்டு செல்கிறது. இந்த வீடியோ டிவிட்டர் உள்ளிட்ட சோஷியல் மீடியாவில் வைரலாகியிருக்கிறது. சிறுவன் செய்த சேட்டையால் குரங்கு சேட்டையை அவன் பார்க்க நேரிட்டுவிட்டது என்று கிண்டலாக சிலர் கமெண்ட் அடித்துள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ