பாரிஸில் டிரம்ப-க்கு எதிராக விண்ணில் பறந்த ராட்சத பலூன்!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் சென்றுள்ள அமெரிக்க அதிரப்ர டிரம்புக்கு எதிராக ராட்சத பலூன் விண்ணில் பறக்கவிடப்பட்டுள்ளது!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 12, 2018, 06:28 PM IST
பாரிஸில் டிரம்ப-க்கு எதிராக விண்ணில் பறந்த  ராட்சத பலூன்! title=

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் சென்றுள்ள அமெரிக்க அதிரப்ர டிரம்புக்கு எதிராக ராட்சத பலூன் விண்ணில் பறக்கவிடப்பட்டுள்ளது!

அமெரிக்க அதிபர் டிரம்பின் பல்வேறு கொள்கைகள் உலகம் முழுவதும் எதிர்ப்பு சம்பாதித்து வருகின்றது. வெளிநாட்டு தொழிலாளர்கள், அகதிகளுக்கு கெடுபிடி, மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளிவர்வகளுக்கு கட்டுபாடு, குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் நாட்டிற்குள் வர தடை போன்ற நடவடிக்கைகள் உலக மக்களை வெறுப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்தநிலையில், உலகப்போர் நினைவு தினத்தில் பங்கேற்க பிரான்ஸ் சென்றுள்ள அதிபர் டிரம்புக்கு எதிராக ராட்சத பலூன் விண்ணில் பறக்கவிடப் பட்டுள்ளது. முன்னதாக அதிரப் டிரம்ப் கடந்த ஜூலை மாதம் லண்டன் வருகை புரிந்த போது இதே பலூன் பறக்கவிடப்பட்டது. பின்னர் டுயூப்ளீனும் பறக்கவிடப்பட்டது. இந்நிலையில் தற்போது பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலும் இந்த பலூன் பறக்கவிடப்பட்டுள்ளது.

உலக முழுவதிலும் இருந்து வந்த 60 நாடுகளின் தலைவர்களின் முன்னிலையில் போராட்டகாரர்களின் இந்த எதிர்ப்பு கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த ஞாயிறு அன்று டிரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டு இளம்பெண்கள் மேலாடை இன்றி டிரம்ப் வாகனத்தின் முன் ஒட்டமெடுத்தனர். இந்நிலையில் இந்த சம்பவத்தினை அடுத்து போராட்டகாரர்கள் எதிர்ப்பு பலூன் பறக்கவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Trending News