ஆட்டோ வெயிட்டிங்ல இருந்தா என்ன செய்யலாம்? டான்ஸ் மாஸ்டரான டிரைவர் வீடியோ வைரல்

Dance Video: வயசானா டான்ஸ் ஆடும் ஆசை அதிகமாயிடுமோ? ஆட்டத்தில் பட்டையைக் கிளப்பும் ஆட்டோ டிரைவர் வீடியோ வைரல்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 19, 2023, 09:37 PM IST
  • வயசானா டான்ஸ் ஆடும் ஆசை அதிகமாயிடுமோ?
  • ஆட்டத்தில் பட்டையைக் கிளப்பும் ஆட்டோ டிரைவர்
  • முகாபுலா முகாபுலா டான்ஸ் வீடியோ வைரல்
ஆட்டோ வெயிட்டிங்ல இருந்தா என்ன செய்யலாம்? டான்ஸ் மாஸ்டரான டிரைவர் வீடியோ வைரல் title=

வைரல் வீடியோ: நமது கைக்குள் உலகம் சுருங்கிவிட்ட நிலையில், அதில் பகிரப்படும் வீடியோக்களும், புகைப்படங்கலும் பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் மாறிவிட்டன. நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இதுபோன்ற வீடியோக்கள் உதவுகின்றன. அதிலும் சமூக ஊடகங்களில் உலா வரும் நடன வீடியோக்களை பலரும் ரசித்து பார்க்கின்றனர். 

இணைய தளங்களில் பகிரப்படும் வீடியோக்கள் மூலம் பலரது நடன திறமைகள் வெளிப்படுகின்றன. இப்படிப்பட்ட வீடியோக்கள் மூலம் உலக அரங்கில் அறிமுகமும் அங்கீகாரமும் பெற்று பிரபலங்களாவதையும் பார்க்கிறோம். திருமணங்கள், பல்வேறு விழாக்கள், பள்ளிகள், தெருக்கள் என பல இடங்களில் பலர் ஆடும் நடனங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு அனைவராலும் பார்த்து ரசிக்கப்படுகிறது.

பெட்ரோல் பங்கில் வரிசையில் நிற்கும்போது என்னவெல்லாம் செய்யலாம் என்று லிஸ்ட் போட்டால், அரட்டை அடிப்பது, மொபைலில் வீடியோ பார்ப்பது என்று பட்டியலிடலாம். ஆனால், இந்த ஆட்டோ டிரைவர் என்ன செய்தார் தெரியுமா? முகாபுலா பாடலுக்கு ஜாலியாக டான்ஸ் ஆடுகிறார்.

மேலும் படிக்க | இணையத்தில் தீ பற்ற வைத்த ஆட்டம்: அந்த எக்ஸ்பிரஷன்... சான்சே இல்ல.. வைரல் வீடியோ

டான்ஸ் ஆடும் ஆட்டோ டிரைவரை வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்தால், அதை பலரும் பார்த்து பலவிதமான கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். நீங்களும் இந்த வீடியோவைப் பார்த்து மார்க் போடுங்கள். உங்கள் மார்க் எவ்வளவு?

இந்த பெட்ரோல் பங்க் டான்சுக்கு லைக்குகளும், வியூஸ்களும் அள்ளுகின்றன. இவர் 60ஸ் கிட்ஸ் என்றாலும், 2000 கிட்ஸ் ஆடும் ஜாலி பாடலுக்கு ஜாலியாய் டான்ஸாடுகிறார்.

மேலும் படிக்க | வயசானாலும் இளமை துள்ளுது! ரவுண்டு கட்டி டான்ஸ் ஆடும் வேட்டிக்கார மாமூ வீடியோ வைரல்

இவரது ஆற்புதமான நடனமும் மாஸ் ரியாக்ஷனும் பார்க்க மிக அழகாக உள்ளது. நடனமாடும் போது அவர் வெகு ஜாலியாக இருப்பதை வீடியோவில் பார்க்கலாம்.

குழந்தைகள் எந்த வித கபடும் சூதும் இல்லாத நல்ல உள்ளங்களை கொண்டவர்கள் என்பதால் அவர்களின் எந்தவொரு செயலையும் அனைவரும் ரசிக்கின்றனர். அதேபோல, எந்தவித தயக்கமும் இல்லாமல் இயல்பாக நடனமாடும் இதுபோன்ற பெரியவர்களையும் பலர் ரசிக்கின்றனர் என்பதற்கு உதாரணம் இந்த வீடியோவுக்கு கிடைத்துள்ள லைக்குகள் என்று சொல்லலாம்.

இது முகாபுலா முகாபுலா பாட்டுக்கு லேட்டஸ்ட் டான்ஸ் என்றால், இதைப் பார்த்தால் நடனப் புயல் பிரபுதேவா கூட கைத்தட்டி ரசிப்பார் என்று சொல்லலாம். இந்த சூப்பர் டான்சரின் வீடியோ இணையத்தில் சக்கைப்போடு போடுகிறது. சரி நீங்கள் இந்த டான்சருக்கு போட்ட மார்க் எவ்வளவு?

மேலும் படிக்க | என்ன கொடுமைடா சாமி! காதில் பறையடிக்கும் பேரன்கள்! ‘ஞே’ என முழிக்கும் தாத்தா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News