வயசானாலும் இளமை துள்ளுது! ரவுண்டு கட்டி டான்ஸ் ஆடும் வேட்டிக்கார மாமூ வீடியோ வைரல்

Funny Viral Video: தன்னுடைய அபார நடனத்தால் இணையத்தை கலக்கிய ’அப்படிப்போடு மாமூ’ வீடியோ! வைரல் ஆகும் அந்த நடனத்தை பார்த்து ரசியுங்கள்

Last Updated : Sep 22, 2023, 08:59 AM IST
  • லுங்கி டான்ஸை வேட்டி டான்ஸாக மாற்றிய கேரள கில்லாடி
  • தாத்தா போடும் குத்தாட்டம் வைரல்
  • ஹேப்பி மாமூ வீடியோ டிரெண்டிங்
வயசானாலும் இளமை துள்ளுது! ரவுண்டு கட்டி டான்ஸ் ஆடும் வேட்டிக்கார மாமூ வீடியோ வைரல் title=

வைரல் வீடியோ: இணையம் தனி உலகமாக இயங்கி வருகிறது என்று சொன்னாலும், அது பொதுவெளியில் இயங்கும் சமூக ஊடக தளம் ஆகும். இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும், பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் மாறிவிட்ட இணையம், நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள உதவுகிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

நடன வீடியோக்களை பலரும் ரசித்து பார்க்கின்ரனர். வீடியோக்கள் மூலம் பலரது நடன திறமைகள் உலகின் பார்வைக்கு வந்துள்ளது. பலருக்கு இப்படிப்பட்ட வீடியோக்கள் மூலம் உலக அரங்கில் அறிமுகமும் அங்கீகாரமும் கூட கிடைத்துள்ளது. திருமணங்கள், பல்வேறு விழாக்கள், பள்ளிகள், தெருக்கள் என பல இடங்களில் பலர் ஆடும் நடனங்களை சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோக்கள் அனைவரிடம் கொண்டு சேர்க்கிறது.

பல்வேறு தரப்பினரின் கலைத் திறமைகளும் பிற திறமைகளும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. குழந்தைகள் எந்த வித கபடும் சூதும் இல்லாத நல்ல உள்ளங்களை கொண்டவர்கள் என்பதால் அவர்களின் எந்தவொரு செயலையும் அனைவரும் ரசிக்கின்றனர். அதேபோல, ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பிறகு, பெரியவர்களும் தங்களும் மனம் மகிழும் நேரத்தில் ஜாலியாக இருக்கின்றனர்.

மேலும் படிக்க | இணையத்தில் தீ பற்ற வைத்த ஆட்டம்: அந்த எக்ஸ்பிரஷன்... சான்சே இல்ல.. வைரல் வீடியோ

சமீபத்தில் அற்புதமாக நடனமாடும் ஒரு முதியவரின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. இந்த வீடியோவில் அவர் ஆடும் ஆட்டத்தை பார்த்து இணையவாசிகள் திகைத்துப் போனாலும், அப்படிப்போடு அருவாளை என்று பலரும் ஜாலியான கமெண்டுகளை பகிர்ந்து வருகின்றனர்.  

முதிய இளைஞரின் நடனத்தை இந்த வீடியோவில் காணலாம்:

வீடியோ இணையத்தில் வைரல் ஆனது

இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் pappula NagaRaju என்பவர் தனது கணக்கில் பகிர்ந்துள்ளார். இந்த லுங்கி டான்சுக்கு ஏகப்பட்ட லைக்குகளும், ஏகப்பட்ட வியூஸ்களும் கிடைத்துள்ளன. பலர் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளனர். இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். பெரும்பாலான பயனர்கள் இந்த வீடியோவில் உள்ள சிறுமியின் நடனத்தையும் பாராட்டி வருகின்றனர். 

மேலும் படிக்க | கீழே விழப்போன மூதாட்டிக்கு சேர் கொடுத்த செல்ல நாய் - வைரல் வீடியோ

பிரபலமான "லுங்கி டான்ஸ்" பாடலுக்கு இந்த தாத்தா மிக அசத்தலாக நடனமாடுகிறார். இது கேரளாவைச் சேர்ந்த தாத்தா என்று தெரிகிறது. இணையத்தில் அவ்வப்போது சில பாடல்களும், விஷயங்களும் டிடெண்ட் ஆவது வழக்கம். அந்த வகையில் இந்த பாடல் பலகாலமாக டிரெண்டாக இருக்கிறது. இந்த ட்ரெண்ட் இன்ஸ்டாகிராம் மற்றும் பிற சமூக வலைத்தளங்களில் ஹிட் ஆகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

லுங்கி டான்ஸ்

"லுங்கி டான்ஸ்" பாடலுகு பல பிரபலங்கள் மற்றும் சமூக ஊடக இன்ஃப்ளூயன்சர்கள் நடனமாடி அதை சமூக ஊடக தளங்களில் பதிவிட்டுள்ளனர். ஒரு விழாவில், வேட்டி கட்டிய ஜெண்டின்மேன் ஆடும் லுங்கி டான்சுக்கு லைக்குகளும், வியூஸ்களும் அள்ளுகின்றன. இவர் 60ஸ் கிட்ஸ் என்றாலும், 2000 கிட்ஸ் ஆடும் ஜாலி பாடலுக்கு வேட்டியை நீட்டிக்காட்டி டான்ஸ் ஆடியுள்ளார்.

ஆற்புதமான நடனமும் மாஸ் ரியாக்ஷனும் பார்க்க மிக அழகாக உள்ளது. நடனமாடும் போது அவர் மட்டுமல்ல, அவரைச் சுற்றியுள்ளவர்களும் ஜாலியாக இருப்பதை வீடியோவில் பார்க்கலாம்.

மேலும் படிக்க | என்ன கொடுமைடா சாமி! காதில் பறையடிக்கும் பேரன்கள்! ‘ஞே’ என முழிக்கும் தாத்தா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News