Viral News: விபத்தில் சிக்கிய யானையின் உயிரை CPR மூலம் மீட்டெத்த மீட்புப் பணியாளர்

அடிபட்ட குட்டி யானைக்கு மீட்புப் பணியாளர் CPR செய்து அந்த யானையின் உயிரை சரியான சமயத்தில் காப்பாற்றினார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 22, 2020, 02:56 PM IST
  • தாய்லாந்தில் விபத்துக்குள்ளான குட்டி யானைக்கு CPR சிகிச்சை.
  • மீட்புப் பணியாளரின் துரித நடவடிக்கையால் உயிர் தப்பியது குட்டி யானை.
  • CPR-ன் வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆனது.
Viral News: விபத்தில் சிக்கிய யானையின் உயிரை CPR மூலம் மீட்டெத்த மீட்புப் பணியாளர்  title=

தாய்லாந்தில் மோட்டார் சைக்கிள் மோதியதால் படுகாயம் அடைந்த ஒரு குட்டி யானை தெய்வாதீனமாக உயிர் தப்பியது. அடிபட்ட அந்த குட்டி யானைக்கு மீட்புப் பணியாளர் இருதய நுரையீரல் புத்துயிர் நடைமுறையை (CPR) மேற்கொண்டதால், அது, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது.

ஒரு மீட்பு பணியாளரான, மனா ஸ்ரீவாடே தனது 26 ஆண்டு கால பணியில் இதுவரை இதுபோன்ற பல உயிர் காக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். ஆனால் அவர் இதற்கு முன்பு ஒரு யானைக்கு CPR செய்ததில்லை.

தாய்லாந்தின் (Thailand) கிழக்கு மாகாணமான சாந்தபுரியில் இந்த சம்பவம் நடந்தது. விடுமுறை நாளில் ஓய்வில் இருந்த ஸ்ரீவாடே அன்று பணிக்கு அழைக்கப்பட்டார். பல யானைகளுடன் சேர்ந்து ஒரு குழுவாக சாலையைக் கடக்கும்போது ஒரு குட்டி யானை மோட்டர் சைக்கிளால் இடிக்கப்பட்டு படுகாயம் அடைந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

குட்டி யானைக்கு செய்யப்பட்ட CPR-ன் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிவிட்டது. அதில் மனா ஒரு சிறிய யானைக்கு, அதன் அருகில் அமர்ந்து, படுத்துக்கொண்டு, இரண்டு கைகளாலும் அழுத்தம் கொடுத்து சிகிச்சை அளிப்பதைக் காண முடிகிறது. சில மீட்டர் தொலைவில் அவருடன் பணிபுரியும் மற்ற சிலர் இந்த விபத்தில் காயம் அடைந்த மோட்டார்சைக்கிள் ஓட்டுனருக்கு சிகிச்சை அளிக்கிறார்கள்.

ALSO READ: See Pic's: கர்ப்பமான நாய்க்கு மகப்பேறு போட்டோஷூட் நடத்திய நாய் உரிமையாளர்!

10 நிமிட நடவடிக்கைக்குப் பிறகு, யானையால் எழுந்து நிற்க முடிந்தது. அதன் பிறகு மற்ற சிகிச்சைகளுக்காக குட்டி யானை வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. யானைக் குட்டியை அதன் தாயுடன் மீண்டும் ஒன்றிணைக்கும் நம்பிக்கையுடன் மீட்புப் பணியாளர்கள் பின்னர் விபத்து நடந்த இடத்திற்குத் திரும்பினர். குட்டி யானையின் அழுகையைக் கேட்டதும், யானைக் கூட்டம் அந்த இடத்திற்கு உடனே வந்ததாக மனா கூறினார்.

"இப்படிப்பட்ட தருணங்களில் உயிரைக் காப்பாற்றி விட வேண்டும் என என் உள்ளுணர்வு எப்போது சொல்லும். ஆனால் குட்டி யானைக்கு சிகிச்சை அளித்த முழு நேரமும் நான் கவலையில் இருந்தேன். ஏனென்றால் தாய் யானையும் பிற யானைகளும் (Elephant) இந்த குட்டி யானையைக் கத்தி அழைப்பதை என்னால் கேட்க முடிந்தது” என்று மனா ராய்ட்டர்ஸிடம் கூறினார்.

"மனித கோட்பாடு மற்றும் ஆன்லைனில் நான் பார்த்த வீடியோ கிளிப்பின் அடிப்படையில் யானையின் இதயம் எங்கே இருக்கும் என்று நான் ஒரு அனுமானத்தில் சிகிச்சை அளித்தேன்" என்று அவர் கூறினார். "குழந்தை யானை எழுந்து நின்று நடக்கத் தொடங்கியதும், நான் உணர்ச்சிவசப்பட்டு அழுது விட்டேன்" என்றார் மனா ஸ்ரீவாடே.

அவர் யானைக்கு சிகிச்சையளிக்கும் இந்த வீடியோ இப்போது சமூக ஊடகங்களில் (Social Media) வைரல் ஆகி வருகிறது.

ALSO READ: வேலை போன இந்தியருக்கு Dubai Lucky Draw-வில் அடித்தது அதிர்ஷ்டம்: ரூ.7 கோடி வென்றார்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News