அழகே பொறாமைப்படும் பேரழகு..மயிலின் பிரமாண்ட நடனம்: வீடியோ வைரல்

மயில்கள் பொதுவாக கருமையான மழை மேகத்தை பார்த்தால், மகிழ்ச்சியாக நடனம் ஆடும் என்பது அனைவரும் அறிந்ததே. ஏனெனில் அவை மழையை மகிழ்ச்சியாக வரவேற்க விரும்புகின்றன. ஆனால் மயிலை இப்படி ஆடி நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள்.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 2, 2023, 01:00 PM IST
  • ஆண் மயிலுக்கு நீளமான நீலம் மற்றும் பச்சை நிற தோகைகள் உள்ளன.
  • மயில்கள் பொதுவாக கருமையான மழை மேகத்தை பார்த்தால், மகிழ்ச்சியாக நடனம் ஆடும்.
  • இன்றைய வைரல் வீடியோ.
அழகே பொறாமைப்படும் பேரழகு..மயிலின் பிரமாண்ட நடனம்: வீடியோ வைரல் title=

மயில்கள் பொதுவாக  பசியானிடே குடும்பத்தைச் சேர்ந்த பறவையான மயிலின் இரு பேரினங்களுள் ஒன்றான, பேவோ பேரினத்தினுள் அடங்கும், cristatus என்ற இனத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும். மயில்கள் ஆண்மயிலின் ஆடம்பரமான தோகைக்காகப் பெயர் பெற்றது. ஆண்மயில் பெண் மயிலைக் கவர்வதற்காக தோகையை விரித்து ஆடும். ஆண் மயில்கள் அழகிய, பளபளப்பான, நீலம் கலந்த பச்சை நிறமுடையவை. இதன் தோகையில் வரிசையாகக் 'கண்' வடிவங்கள் உள்ளன. தோகையை விரிக்கும் போது இவை மிகவும் அழகாகத் தோற்றமளிக்கின்றன. பெண் மயில்களின் உடல் மங்கலான பச்சையும், பளபளப்புக் கொண்ட நீலமும், பச்சை கலந்த சாம்பல் நிறமும் கலந்தது. 

ஆண் மயிலின் கழுத்து, மார்பு, வயிறு பளபளக்கும் கருநீல நிறத்திலும், இறக்கைகளில் வெள்ளையும், பழுப்புமாக இறகுகள் போன்ற பட்டைகளும் இருக்கும். நீண்ட தோகை பச்சை நிறத்திலும், பளபளக்கும் கருநீல வட்டங்களையும் கொண்டிருக்கும். தோகையில் உள்ள சில சிறகுகளின் முனை பிற வடிவத்தில் இருக்கும். ஆண் மயில் உருவில் பெரியவை. மயிலின் அலகின் முனையில் இருந்து வால் சிறகு வரை சுமார் 100-115 செ. மீ. நீளமும், நன்கு வளர்ந்த முதிர்ந்த பறவைகளில் முழுவதுமாக வளர்ந்த தோகையின் கடைசி முனை வரை கணக்கிட்டால் சுமார் 195-225 செ.மீ. நீளமும் கொண்டிருக்கும். இதன் எடை சுமார் 4-6 கிலோ இருக்கும். தோகையில் சுமார் 200க்கும் மேற்பட்ட சிறகுகள் இருக்கும். 

மேலும் படிக்க | திருட வந்த தம்பிகளுக்கு வந்த சோதனை: வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வைரல் வீடியோ

இந்த நிலையில் பறவை இனங்களில் மிக அழகானது மயில் என்றால் அது மிகை அல்ல. அதுவும் ஆண் மயில் தனது தோகையை விரித்து ஆடும் அழகை பார்ப்பதற்கு காணக்கண்கோடி வேண்டும். அப்படி ஒரு கொள்ளை அழகை கொண்ட மயில், வானில் கரு மேகங்கள் சூழ்ந்த தட்பவெப்ப நிலையில், பெண் மயிலை கவர்வதற்காக தனது அழகான தோகையை விரித்து ஆடுவது பார்ப்பவர்களை வியக்க வைக்கும். இப்படி காண்போரை கவரும் மயில் தனது தோகையை விரித்து ஆடும் கண்கொள்ளாக் காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. 

இந்த வீடியோவில், மயில் தனது அழகான தோகையை விரித்து ஆடுகிறது. இதைப்பார்த்த நெட்டிசன்கள், மயில் தோகையை விரித்து ஆடும் அழகை பார்த்து ரசித்ததோடு மட்டுமின்றி, லைக்குகளையும், கருத்துக்களையும் அள்ளி வீசியுள்ளனர். எனவே இந்தியாவின் தேசியப் பறவையான மயில்களை இப்போதெல்லாம் அரிதாகிவிட்ட சூழலில், அவை தோகை விரித்தாடும் காட்சியை வீடியோக்களில் தான் பார்க்க முடிகிறது.

வீடியோவை இங்கே காணுங்கள்:

மயிலின் இந்த அழகான வீடியோ Filmatelier UteNeumerkel என்கிற யூடியூப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஆயிரக்கணக்கான வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. மேலும் இந்த பார்த்து அதிர்ந்து போன இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். 

(இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | ’தலைக்கு தில்ல பார்த்தியா..’ முதலையிடம் வம்பு இழுக்கும் வாத்து: வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News