BB-5 நிகழ்ச்சியை ரம்யாகிருஷ்ணன் தொகுத்து வழங்குவதை உறுதிபடுத்திய கமல்!

நடிகை ரம்யா கிருஷ்ணன் இந்த வார  நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவதாக தகவல் வெளியாகியது.  இந்நிலையில் இதனை உறுதி செய்யும் விதமாக ப்ரோமோ வெளியாகியுள்ளது.  

Written by - ZEE Bureau | Last Updated : Nov 27, 2021, 05:59 PM IST
BB-5 நிகழ்ச்சியை ரம்யாகிருஷ்ணன் தொகுத்து வழங்குவதை உறுதிபடுத்திய கமல்!

இந்திய தொலைக்காட்சியில் புகழ்பெற்ற ரியாலிட்டி கேம் ஷோ 'பிக்பாஸ்' ஆகும்.  இந்நிகழ்ச்சி முதலில் ஹிந்தி மொழியில் ஆரம்பிக்கப்பட்டு, அது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்நிகழ்ச்சி படிப்படியாக தமிழ், தெலுங்கு, கன்னடம், பெங்காலி, மலையாளம் மற்றும் மராத்தி ஆகிய மொழிகளில் தொடங்கப்பட்டது.

ALSO READ இந்த வாரம் OTT-யில் வெளியாகும் 10 படங்களின் பட்டியல் இதோ!

தமிழில் விஜய் டிவியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.  அதனை தொடர்ந்து இந்நிகழ்ச்சியின் 4 சீசன்கள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு, 5வது சீசன் அக்டோபரில் தொடங்கபட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது. இந்நிகழ்ச்சியின் அனைத்து சீசன்களையும் உலகநாயகன் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்தது.

இந்நிலையில் கமலுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.  அதன் காரணமாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட இவர், இந்நிகழ்ச்சியில் இருந்து விலகினார்.  இவரின் விலகலை தொடர்ந்து அடுத்து யார் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்? என்ற கேள்வி பரவலாக பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியினை விஜய் சேதுபதி, சிம்பு, ஸ்ருதி ஹாசன் போன்றவர்கள் தொகுத்து வழங்க இருப்பதாக பேசப்பட்டது.  அதனையடுத்து நடிகை ரம்யா கிருஷ்ணன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவதாக தகவல் வெளியாகியது.  இந்நிலையில் இதனை உறுதி செய்யும் விதமாக ப்ரோமோ வெளியாகியுள்ளது.  

 

அதில் ஹவுஸ்மேட்ஸ்கள் முன்னிலையில் மருத்துவமனையில் இருந்துகொண்டு அகம் டிவி வழியே தோன்றிய கமல்ஹாசன், இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க எனக்கு ஒரு தோழி உதவி செய்கிறேன் என்று கூறியுள்ளார் என்று சொன்னதும் நடிகை ரம்யா கிருஷ்ணன் என்ட்ரி ஆகிறார்.  அதனையடுத்து ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் கமல் உடல் நாலாம் தேறி வர வாழ்த்துக்களை கூறினர்.  இவ்வாறாக இந்த ப்ரோமோ நிறைவடைந்துள்ளது.  இதன் மூலம் நடிகை ரம்யா கிருஷ்ணன் தான் இந்த சீசனை தொகுத்து வழங்குகிறார் என்பது உறுதியாகியுள்ளது.

ALSO READ இந்த வார பிக்பாஸ் நிகழ்ச்சியை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறாரா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR 

More Stories

Trending News