அர்ச்சனாவுக்கு டஃப் கொடுக்க பிக்பாஸ் வீடுக்குள் வரும் பிரபல Vj..!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய போட்டியாளராக வைல்ட் கார்ட் எண்ட்ரி கொடுக்க உள்ள பிரபல தொகுப்பாளி குறித்து தகவல் வெளியாகியுள்ளது... 

Written by - ZEE Bureau | Last Updated : Dec 6, 2020, 12:48 PM IST
அர்ச்சனாவுக்கு டஃப் கொடுக்க பிக்பாஸ் வீடுக்குள் வரும் பிரபல Vj..!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய போட்டியாளராக வைல்ட் கார்ட் எண்ட்ரி கொடுக்க உள்ள பிரபல தொகுப்பாளி குறித்து தகவல் வெளியாகியுள்ளது... 

சுமார் 60 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் (Bigg Boss 4 Tamil) நிகழ்ச்சியில் இதுவரை வேல்முருகன், ரேகா, சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா ஆகிய 5 பேர் வெளியேற்றப்பட்டு 13 பேர் வீட்டில் வசித்து வருக்கின்றனர். இவர்களில் ஆரி, அனிதா, சனம், நிஷா, ரம்யா, ஆஜித், ஷிவானி என 7 பேர் இந்த வாரம் வெளியேற்றப்படுவோரின் பட்டியலில் இருக்கின்றனர். இவர்களில் ஒருவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நிகழ்ச்சியில் வெளியேற்றப்படுவார்.

இந்நிலையில், பிரபல தொகுப்பாளினி மகேஷ்வரி (VJ Maheswari) பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்ட் கார்ட் போட்டியாளராக செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. நிகழ்ச்சி முடிய இன்னும் 40 நாட்களே மீதமிருக்கும் நிலையில் இப்போது வைல்ட் கார்ட் என்ட்ரி (Wild card entry) சாத்தியமா என்ற கேள்வி எழுந்தாலும், தனது சமூகவலைதள பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் விஜே மகேஸ்வரி இன்னும் ஒரு சில தினங்களில் ஆச்சர்யமான செய்தி வெளிவரும் என்று தெரிவித்துள்ளார்.

ALSO READ | உள்ளாடையுடன் படுக்கையில் இருக்கும் நடிகை அஞ்சலியின் வீடியோ லீக்..!

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vj Maheswari (@maheswarichanakyan)

அவர் பிக்பாஸ்க்கு செல்வதைத்தான் இப்படி மறைமுகமாக சொல்கிறார் என நெட்டிசன்கள் கமெண்ட் பதிவிட்டுள்ளனர். மேலும் விஜே மகேஸ்வரி பதிவிட்டிருக்கும் புகைப்படத்தில் அவர் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிகிறது.

ஏற்கெனவே சீரியல் நடிகர் அஸீம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக செல்ல இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அவரது தாயாருக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே அவரது வருகை தாமதமாவதாக கூறப்படுகிறது. இந்த வாரம் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட உள்ள நிலையில் உள்ளே செல்ல இருப்பது அஸீமா அல்லது விஜே மகேஸ்வரியா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்..

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News