"சாஹூ" திரைப்படத்தின் மிரல வைக்கும் மேக்கிங் Video வெளியானது!

பிரபாஸ் பிறந்தநாளை முன்னிட்டு "சாஹூ" திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

Last Updated : Oct 23, 2018, 12:14 PM IST
"சாஹூ" திரைப்படத்தின் மிரல வைக்கும் மேக்கிங் Video வெளியானது! title=

பிரபாஸ் பிறந்தநாளை முன்னிட்டு "சாஹூ" திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

UV கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி மற்றும் பிரமோத் இணைந்து தயாரிக்க சுஜீத் இயக்கத்தில் பிரபாஸ் - ஸ்ரத்தா கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் திரைப்படம் "சாஹூ". ரசிகர்கள் இதுவரை காணாத வித்தியாச தோற்றத்தில் பிரபாஸ் "சாஹூ" படத்தில் நடித்துள்ளார். இவருடன் நடிகர் அருண் விஜய் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். 

திரைப்படத்துறையின் மிகச்சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களான சாபு சிரில் கலை இயக்குனராக, ஒளிப்பதிவை மதி ஏற்றுக்கொள்ள, திரைப்படத்தொகுப்பு ஸ்ரீகர் பிரசாத் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகி வரும் "சாஹூ" திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்துள்ள நிலையில் இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில் ப்ரமோஷன் வேலைகளினை படக்குழுவினர் துவங்கிவிட்டனர். இந்நிலையில் இன்று (அக்டோபர் 23) படத்தின் நாயகன் பிரபாஸுக்கு பிறந்தநாள் என்பதால் "சாஹூ" திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இத்திரைப்படம் 2019-ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் திரையினை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது!

Trending News