உயிருடன் இருக்கும் மனைவியை ‘கொலை’ செய்ததாக 10 ஆண்டு சிறை அனுபவிக்கும் கணவர்

செய்யாத குற்றத்திற்கான தண்டனை அனுபவித்து வரும் பலரை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இது மிகவும் வித்தியாசமான, ஆனால், மனதை இந்த விசித்திர சம்பவம் உங்கள் மனதை வேதனைப்படுத்தும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 3, 2022, 03:05 PM IST
  • செய்யாத குற்றத்திற்கான தண்டனை அனுபவித்து வரும் பலரை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.
  • இந்த விசித்திர சம்பவம் உங்கள் மனதை வேதனைப்படுத்தும்.
உயிருடன் இருக்கும் மனைவியை ‘கொலை’ செய்ததாக 10 ஆண்டு சிறை அனுபவிக்கும் கணவர் title=

புனைகதையை விட யதார்த்தம் விசித்திரமானது என்று அடிக்கடி பெரியவர்கள் கூற கேட்டிருப்போம். இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தின் ஒரு சம்பவம் மேற்கூறிய பழமொழியை இன்னும் துல்லியமாக நிரூபிக்கக்கூடும். தனது மனைவியைக் கொன்ற குற்றத்திற்காக ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இருப்பினும், மனைவி உயிருடன் தான் இருக்கிறார் என்பது பல ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கந்தாய் என்பவர் 2006 ஆம் ஆண்டு ராம்வதியை திருமணம் செய்து கொண்டார். இருவரும் ஜமாபூர் என்ற ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இருப்பினும், 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், ராம்வதி மர்மமான முறையில் காணாமல் போனார். கந்தாய் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் அவளைத் தேடி வந்தனர்.

இதன் பிறகு,  வழக்கமாக பெரும்பாலான சம்பவங்களில் நடப்பது போல், கணவர் கந்தாய் மீது சந்தேகம் ஏற்பட்டது. ராம்வதியின் குடும்பத்தினர் அவர் மீது கடத்தல் மற்றும் கொலை செய்ததாக புகார் அளித்தனர். அடுத்த எட்டு ஆண்டுகளில், கந்தாய் தான் செய்யாத குற்றத்திற்காக சட்டப் போராட்டத்தில் சிக்கி, இயல்பான வாழ்க்கையை வாழ முடியாமல் தவித்தார்.

மேலும் படிக்க | Viral News: ₹3,419 கோடி மின்சார பில் கொடுத்த ஷாக்; மயங்கி விழுந்த வீட்டு உரிமையாளர்

2017 இல் நீதிமன்றம் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. அதன்பிறகு, கந்தாய் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் மற்றும் ஆறு ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு ஜாமீன் பெற்றார்.

இருப்பினும், ஒரு கடத்தல்காரன் மற்றும் கொலைகாரன் என்ற முத்திரை அவர் மேல் இருந்தது. ஆனால் கடந்த வாரம் சனிக்கிழமையன்று கந்தாயின் உறவினர் ஒருவர் அவரது மனைவி ராம்வதியை அவரது சகோதரி மற்றும் மைத்துனர் வீட்டில் பார்த்ததாக தெரிவித்த நிலையில், நிலமை தலைகீழாக மாறியது.

அவர் உயிருடன் இருப்பதை நிரூபிக்க, ராம்வதியின் மைத்துனரின் வீட்டிற்கு வெளியே கிராம மக்கள் அனைவரும் கூட வேண்டும் என்று கேட்டுக் கொண்ட கந்தாய் பின்னர் தனது மற்ற உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார்," என்று காவல்துறை கூறியது.

கந்தாய் மற்றும்  கிராம மக்கள் அனைவரும் அங்கு பார்த்த காட்சி அவர்களை ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது. ராம்வதி அவர்கள்  உயிருடன் நிற்பதைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தனர். ராம்கான் ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி (SHO) சஞ்சய் சிங் தலைமையிலான பெண் அதிகாரிகள் உட்பட ஒரு போலீஸ் குழு, சம்பவ இடத்திற்கு வந்து,  மனைவி உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வை உறுதிப்படுத்தியது.

பின்னர் ராம்வதி காப்பகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார், வழக்கின் நிலை என்ன ஆகும் என்பது போகப் போகத் தெரியும்.

மேலும் படிக்க | Viral Video: விமானத்தில் வழங்கிய உணவில் ‘பாம்பின் தலை’; அதிர்ச்சியில் உறைந்த பணிப்பெண்

மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக வெளியான பகீர் தகவல்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News