தாடி வளர்த்தால் காதலிக்க மாட்டோம்... இளம்பெண்களின் வினோத போராட்டம் - வைரலாகும் வீடியோ

Bizarre Viral Video: தாடி வளர்ப்பவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 10க்கும் மேற்பட்ட பெண்கள் முகத்தில் ஒட்டு தாடியுடன் போராட்டம் நடத்தும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Oct 21, 2024, 06:28 PM IST
  • இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி வைரலாகி வருகிறது.
  • பொதுவெளியில் கோஷம் எழுப்பியபடி பெண்கள் போராட்டம் நடத்தினர்.
  • சாலையில் செல்லும் அனைவரும் போராடும் பெண்களை வினோதமாக பார்த்துச் செல்கின்றனர்.
தாடி வளர்த்தால் காதலிக்க மாட்டோம்... இளம்பெண்களின் வினோத போராட்டம் - வைரலாகும் வீடியோ title=

Instagram Bizarre Viral Video Latest: இணையத்தில் எப்போதுமே வினோதமான விஷயங்கள் அடிக்கடி வைரலாகும். அப்படி ஒரு வீடியோதான் தற்போது இளைஞர்கள் இடையே அதிகம் பகிரப்பட்டு வருகிறது. X தளம் தொடங்கி வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என அனைத்து இடங்களிலும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. அதாவது, மத்திய பிரதேசம் தலைநகரில் இளம் பெண்கள் ஒன்றிணைந்து, தாடியே இல்லாமல் இருக்கும் பாய் பிரண்ட்களுக்கு ஆதாரவாக போராட்டம் நடத்தும் வீடியோதான் தற்போது வைரலாகிறது. படிக்கும்போதே குழப்புகிறதா... அப்படியென்றால் இதுகுறித்து தெளிவாக, விரிவாக தெரிந்துகொள்ள தொடர்ந்து வாசியுங்கள்...

அதாவது, ஆண்கள் தாடி வளர்க்க கூடாது என்பதற்காக சில பெண்கள் போராட்டம் நடத்துவது அந்த வீடியோவில் தெரிகிறது. அவர்கள் தொடர்ந்து பல்வேறு கோஷங்களை எழுப்பி வருகின்றனர். கைகளிலும் கோரிக்கை பலகைகளை ஏந்தி நிற்கின்றனர். "No Clean Shave, No Love" (தாடியை முழுமையாக எடுக்கவில்லை என்றால் காதல் இல்லை என அர்த்தம்), "Keep a beard or keep a girlfriend" (ஒன்று தாடி வைத்துக்கொள்ளுங்கள் இல்லையெனில் காதலியை வைத்துக்கொள்ளுங்கள் என பொருள்) இதுபோன்ற ஆங்கிலம் மற்றும் இந்தி வாசகங்கள் அடங்கிய பலகைகளை அவர்கள் கையில் வைத்து கோஷம் எழுப்புகின்றனர். 

ஒட்டு தாடியுடன் பெண்கள்

இந்த வீடியோ கடந்த சில நாள்களாகவே இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகிறது. இந்த வீடியோ பொதுவெளியில் ஒரு சாலையில் எடுக்கப்பட்டுள்ளது. 10க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் தங்களின் முகத்தில் ஒட்டுத்தாடியோடும்,  கைகளில் பலகைகளை வைத்துக்கொண்டு, கோஷங்களை எழுப்பியவாரும் பேரணி போல நடந்துசெல்வதை பார்த்த பொதுமக்கள் பலரும் அவர்களை வினோதமாக பார்த்தார்கள். பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள், இளைஞர்களும் கூட அவர்களை வியந்து பார்த்தனர். பலரும் அவர்களின் செயலை கண்டு அடக்க முடியாத வகையில் சிரித்தனர். இவை அனைத்தும் அந்த வீடியோவில் பதிவாகி இருக்கிறது. 

மேலும் படிக்க | காரை தண்ணீரில் ஓட்டி லைசன்ஸ் வாங்கும் நபர்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

வீடியோவின் பின்னணி என்ன?

இருப்பினும், இது நகைச்சுவைக்காக, பொழுதுபோக்கு நோக்கத்தில் சமூக வலைதள கவன ஈர்ப்புக்காக நடத்தப்பட்டதா அல்லது இதன் பின்னணியில் ஏதும் விஷயம் உள்ளதா என்பது இதுவரை உறுதியாக தெரியவில்லை. நெட்டிசன்களும் இந்த வீடியோ நகைச்சுவையாக இருப்பதாக கூறி தங்களின் தாடி வைத்திருக்கும் நண்பர்களுக்கு பகிர்ந்து வருகின்றனர். ஏதாவது, நிறுவனத்தின் விளம்பர நோக்கிலானா முன்னெடுப்பாக கூட இது இருக்கலாம் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

நகைச்சுவையான கமெண்ட்கள்

ghantaa என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த வீடியோவை முதலில் பதிவிட்டவர்கள் இவர்கள்தானா என்பது உறுதியாக தெரியவில்லை. இந்த பக்கத்தில் வீடியோ இரண்டு நாள்களுக்கு முன் பதிவிடப்பட்டுள்ளது. இதில் கமெண்ட் செய்த ஒருவர்,"இப்படி சத்தம்போட்டு கூப்பாடு போடுவதற்கு பதில் தாடி இல்லாத ஆண்களையே நீங்கள் காதலித்துவிடலாமே..." என பதிவிட்டுள்ளார். மற்றொருவர்,"These types of Indore girls, please be indoors" (இதுபோன்ற இந்தூர் பெண்கள் வீட்டிலேயே இருந்துவிடுங்கள்) என்றும் நகைச்சுவையாக பதிவிட்டுள்ளனர். 

தாடி வளர்த்தாலே அவன்...

இந்த காலகட்ட இளைஞர்கள் பலரும் சிறுவயதிலேயே பெரியளவில் தாடி வைக்க விரும்புகின்றனர். ஆனால் இதற்கு முந்தைய தலைமுறைகளில் தாடி வளர்ப்பது வேறு விதமாக புரிந்துகொள்ளப்பட்டது. தாடி வளர்த்தால் அசுத்தமானவர்கள் என கூறப்பட்டது. குறிப்பாக அந்த காலத்தில் மனைவி கர்ப்பமாக இருந்தாலோ, ஒருவர் வறுமையில் இருந்தாலோ, அல்லது கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்தவோ தாடியை ஒருவர் வளர்ப்பார்கள். தாடி வளர்த்தாலே அவனை தேவதாஸ் என முத்திரை குத்தி, காதலிக்காதவனை கூட கடுப்பேத்துவார்கள். அந்த வகையில், இந்த வீடியோ அதிகம் தாடி வளர்க்கும் ஆண்களுக்கு அனுப்பி, தாடி வளர்ப்பதை பிடிக்காதவர்களும் தங்களின் ஆசுவாசத்தை பகிர்ந்துகொள்கிறார்கள் எனலாம். 

மேலும் படிக்க | இந்த எருமையின் விலை 23 கோடியா! என்ன காரணம் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News