பணியிடங்களில் நடைப்பெறும் பாலியல் சீண்டல்களில் இருந்து பெண்கள் தப்பிக்க என்ன வழி என பாலிவுட் பிரபலம் ராக்கி ஷாவந்த் வீடியோ ஒன்றின் மூலம் விளக்கமளித்துள்ளார்!
பத்திரிக்கை துறை, சினிமா துறை என பாகுபாடு இல்லாமல் அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் நிகழ்ந்து வருகிறது. இதை மாற்றவே பெண்கள் தங்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவை குறித்து #Metoo மூலம் பேசி வருகின்றனர்.
கடந்த சில தினங்களாக #MeToo என்ற ஹேஷ்டேக் மூலம் பெண்களுக்கு எதிராக பாலியல் புகார்கள், குற்றங்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டு வருகின்றன. ஹாலிவுட்டில் பிரபலமாக துவங்கிய இந்த விவகாரம் கடந்த ஒருமாத காலமாக தமிழகத்தை உலுக்கி வருகின்றது.
தமிழகத்தில் முதன்முறையாக #MeToo விவகாரத்தில் சிக்கியவர் கவிஞர் வைரமுத்து அவர்கள் தான். இவர் மீது பாடகி சின்மயி முதன்முறையாக பாலியல் குற்றச்சாட்டினை முன்வைத்தார். இவரைத்தொடர்ந்து நடிகர் ராதாரவி, நடன இயக்குநர் கல்யாண், பிரபல பாடகர் கார்த்திக், இயக்குநர் சுசி கனேசன் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
மறுமுனையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதராவாக பெண் பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாலிவுட் நடிகை ராக்கிஷாவந்த் #MeToo விவகாரத்தில் இருந்து பெண்கள் எவ்வாறு தப்பிக்க வேண்டுமென வீடியோ ஒன்றின் மூலம் விவரித்துள்ளார்.
இந்த வீடியோவில் அவர்... பெண்கள் தங்களை காத்துக்கள்ள தங்களது இடுப்பினை இரும்பு சங்கிளியால் சுற்றி பூட்டு கொண்டு பூட்டிக்கொள்ளுமாறு குறிப்பிட்டுள்ளார். பாலிவுட்டின் அதிகபிரசிங்கி என்றழைக்கப்படும் ராக்கிஷாவந்தின் வீடியோ தற்போது அனைவரது கோவத்தினையும் பெற்றுள்ளது. சமூக ஊடக நண்பர்கள் ராக்கியினை திட்டி தீர்த்து வருகின்றனர்.