பாம்பின் பல்லைப் பிடுங்கிய எதிரி! பயத்தால் எஸ்கேப் ஆகும் நாகம்! வைரல் வீடியோ

Cobra Mongoose Fight Video: பாம்பைப் பதம் பார்க்கும் கீரிப்பிள்ளை! பிள்ளையாய் இருந்தாலும் இது கீரிப்பிள்ளையின் சூப்பர் ஃபைட்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 1, 2023, 03:58 PM IST
  • நாக பாம்பு மற்றும் கீரியின் வைரல் வீடியோ
  • கீரியுடன் சண்டைப் போட்டால் கீறிவிடுமா?
  • விலங்குகளின் திக் திக் சண்டையின் வீடியோ
பாம்பின் பல்லைப் பிடுங்கிய எதிரி! பயத்தால் எஸ்கேப் ஆகும் நாகம்! வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணையத்தில் வித்தியாசமான வீடியோக்கள் என்றாலே உடனே ட்ரெண்டிங் ஆகிவிடுகின்றன. அதேபோன்று இதயத்தைத் தொடும் அல்லது அதிர்ச்சியூட்டும் மற்றும் உற்சாகமான வீடியோக்களும் சமூக வலைதளங்களில்  வைரலாகின்றன. சில நேரத்தில், வித்தியாசமான அல்லது அரிய சம்பவங்கள் தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் மனதை விட்டு நீங்குவதில்லை. அவை இணையவாசிகளை கவர்ந்த வைரல் வீடியோக்களாகிவிடுகின்றன.

விலங்குகள், அதிலும் அதிக அபாயம் கொண்ட பாம்புகள் சம்பந்தப்பட்ட வீடியோக்களும் வெளியானதுமே வைரலாகிவிடும். பாம்பின் பெயரைக் கேட்டாலே நடுங்கும் மனிதர்களுக்கு, அதை அதன் இயல்பிலேயே பார்க்கக் கிடைக்கும் தருணம் அரிது. எனவே, பாம்பு வீடியோக்கள் உடனடியாக வைரலாகி விடுகின்றன. 

மேலும் படிக்க | கவிஞரான பைலட்! விமானத்தை ஓட்டி மொழி வானில் சிறகடிக்கும் கவிஞர்

அதிலும் பாம்புக்கும் அதன் மிகப் பெரிய எதிரான கீரிக்கும் சண்டை நடந்தால், அதைப் பார்க்க அனைவருமே விரும்புவார்கள் தானே? இந்த வீடியோ இதுவரை மில்லியன் கணக்கான முறை பார்க்கப்பட்டது. இணையவாசிகள் பலரும் இந்த வீடியோவுக்கு லை செய்து கமெண்ட் போட்டு  வருகின்றனர். 

கீரிப்பிள்ளையைத் தாக்கிய நாகப்பாம்பு
வைரலாகும் இந்த வீடியோவில், பாம்பு, சாலையில் ஜாலியாக திரிந்துக் கொண்டே எதாவது இரை அகப்படுமா என்று தேடிக்க் கொண்டு சுற்றுகிறது. அங்கு வந்த கீரியை தாக்க அது தயாராகவதற்கு முன்னதாக என்ன நடந்தது தெரியுமா?

பாம்பு-கீரி சண்டையின் வீடியோவை இங்கே பாருங்கள்

இரையைத் தேடி அங்கும் இங்கும் அலையும் நேரத்தில், கிடைத்த கீரியை பாம்பால் என்ன செய்ய முடிந்தது? எதையும் எதிர்பாராமால், சும்மா அங்கே வந்த கீரி, திடீரென தாக்கத் தொடங்கி, பாம்பை ஓட வைத்த வித்தியாசமான வீடியோ இது.

ஒரு நொடி தாமதித்த கீரி, உடனே ஆக்ரோஷமாக தாக்கத் துவங்கியதும், தாக்க நினைத்த பாம்பு, துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடத் தொடங்குவது சிரிப்பை வரவழைத்தாலும், எந்த நேரத்திலும் உஷாராக இருக்க வேண்டும் என்ற கீரியின் விவேகத்தையும், பலசாலி என்று நினைத்து நிதானமாக இருக்கும் பாம்புக்கு நேர்ந்த பின்னடைவையும் வைத்து ஒரு வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக் கொடுக்கிறது/.

இந்த வீடியோ snake._.world என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஆயிரக்கணக்கான வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இதற்கு பலரும் பல வித கமெண்டுகளை பதிவிட்டு வருகிறார்கள். 

மேலும் படிக்க | கொஞ்சம் விட்டிருந்தா சோலி முடிஞ்சிருக்கும், மலைபாம்புக்கு பல்பு: வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News