ரூல்ஸ் எங்களுக்கு இல்ல..! பூட்டி இருந்த கதவை தானாக திறக்கும் பூனை!

பூட்டப்பட்ட அறைக்குள் இருக்கும் பூனை ஒன்று அதன் படைகளை வெளியே கொண்டு செல்ல துரிதமாக செயல்பட்டு கதவை திறந்து அனைவரையும் வெளியே கூட்டி செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  

Written by - RK Spark | Last Updated : Sep 20, 2022, 11:24 AM IST
  • கதவை தானாக திறக்கும் பூனை.
  • அருகில் இருந்து ஆர்ச்சயமாக பார்க்கும் நாய்.
  • இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ.
ரூல்ஸ் எங்களுக்கு இல்ல..! பூட்டி இருந்த கதவை தானாக திறக்கும் பூனை! title=

பெரும்பாலும் விலங்குகளின் செயல்கள் மனிதர்களின் செயல்களை போலவே இருப்பதை நாம் பல நேரங்களில் பல இடங்களில் பார்த்திருப்போம்.  மனித உருவத்திலிருந்து வேறுபட்டு காணப்படும் அவை கிட்டத்தட்ட நாம் செய்கின்ற செயல்களை போல தான் பல நேரங்களில் செய்கின்றன, சில சமயம் இதுபோன்ற காட்சிகளை நாம் இணையதளங்களில் கண்டு மகிழ்கிறோம்.  நாம் நேரில் காண முடியாத பல ஆச்சர்யமான வேடிக்கையான சம்பவங்களை நம் கண் முன் கொண்டுவந்து நிறுத்துவதில் இணையம் முக்கிய பங்கு வகிக்கிறது.  இப்போது அப்படி ஒரு வேடிக்கையான வீடியோவை தான் இணையம் நமக்கு காமித்துள்ளது, மனிதர்கள் ஆபத்தில் மாட்டிக்கொண்டால் எப்படி அதிலிருந்து வெளியேற முயற்சி செய்வார்களோ அதைப்போலவே பூனை ஒன்று தனது படைகளை காப்பாற்றி வெளியேற முயற்சி செய்கிறது.

மேலும் படிக்க: 'ஷ்ஷ்...சைலண்டா எடுத்துட்டு ஓடிடுவோம்’: கில்லாடி குரங்கு செய்த தில்லாலங்கடி வேலை

பூனையின் தந்திரத்தை கண்ட இணையாவசிகள் பலரும் ஆச்சர்யமடைந்துள்ளனர்.  இந்த வீடியோவானது ட்விட்டரில் யோக் என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது.  அந்த வீடியோவில் பூட்டப்பட்ட ஒரு அறைக்குள் ஒரு கருப்பு பூனையும் அதனருகில் ஒரு பெரிய நாயும் நின்றுகொண்டு இருப்பதை காண முடிகிறது.  மேலும் அந்த அறைக்குள் இரண்டு பூனைக்குட்டிகள் இருப்பது வீடியோ ஓட ஆரம்பித்த பிறகு தான் தெரிகிறது, அந்த பெரிய பூனையானது தனது படைகளை எப்படியாது காப்பாற்றி வெளியே கொண்டு போய்விட எண்ணுகிறது.  உடனே தாவிக்குவித்து கதவின் கைப்பிடியில் அடித்து மெதுவாக கதவை திறக்க முயற்சி செய்கிறது, அதன் முயற்சி பலித்துவிட்டது, கதவு உடனே திறக்க பூனையும் அதன் படைகளும் வேகவேகமாக அந்த அறையை விட்டு வெளியே செல்வதுடன் இந்த வீடியோ முடிவடைகிறது.

 

இந்த வீடியோ இணையவாசிகள் அனைவரையும் கவர்ந்துள்ளது, பலரும் பூனையின் மூளைத்திறனையும் தலைமைப்பண்பையும் கண்டு வியந்து பாராட்டி வருகின்றனர்.  ட்விட்டரில் பகிரப்பட்டிருக்கும் இந்த வீடியோவை இதுவரை தொன்னூறு ஆயிரத்திற்கும் மேற்பட்ட இணையவாசிகள் பார்த்து ரசித்துள்ளனர்.  மேலும் இந்த வீடியோவிற்கு பல லைக்குகளும், சிறப்பான கமெண்டுகளும் குவிந்து வருகிறது.

மேலும் படிக்க: பாய்ந்து வந்து கட்டிக்கொண்ட பெண் சிங்கம்: பாசமா, பகையா? வியக்க வைக்கும் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News