வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் திருமண வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
திருமணம் தொடர்பான நூற்றுக்கணக்கான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. ஆனால் அவற்றில் சில மட்டுமே இதயத்தைத் திருடும் வகையில் அமைகின்றன. சிலவற்றில் மணமக்களின் வித்தியாசமான பாணி நம்மை வீடியோவை மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கிறது. தற்போதும் அப்படி ஒரு வித்தியாசமான வீடியோ வெளியாகியுள்ளது.
செல்லப்பிராணிகள் வைத்துள்ளவர்களின் வீடுகளில் திருமன விசேஷங்கள் நடந்தால், அதன் ஒவ்வொரு கட்டத்திலும் அந்த செல்லப்பிராணிகளும் வீட்டு உறுப்பினரைப் போல பங்கெடுப்பது வழக்கம். திருமணத்தின் பல சடங்குகளில் இவற்றால் சூழல் மிக அழகாகி விடுகின்றது. நாய், பூனை, கிளி, முயல் போன்ற செல்லப்பிராணிகளை மக்கள் மிக சுவாரசியமான வழிகளில் தங்கள் திருமணங்களில் பங்குகொள்ளச் செய்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் சமீபத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இதைப் பார்த்தால் மிகவும் ஆச்சரியமாகவும் கியூட்டாகவும் இருக்கும்.
மணமகனுக்கு முன்னர் செல்ல நாயை கட்டிப்பிடித்த மணமகள்
செல்லப்பிராணி உரிமையாளர்களுக்கு, அவை குடும்ப உறுப்பினர்களை போன்றவை. இந்த விலங்குகளுக்கு அவர்களின் வாழ்வில் முக்கிய இடம் இருக்கிறது. தங்கள் வாழ்க்கையில் முக்கியமான நிகழ்வுகளில் அவற்றை சேர்த்துக் கொள்கிறார்கள். செல்லப் பிராணிகளை மிக விரும்பும் வினிஷா கோத்தாரி என்ற பெண்ணும் தனது திருமண நாளில் தனது செல்ல நாய்க்கு தான் அளிக்கும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தினார்.
மேலும் படிக்க | அழகே பொறாமைப்படும் பேரழகு..மயிலின் பிரமாண்ட நடனம்: வீடியோ வைரல்
தன் திருமணத்தன்று தனது நாய் அசத்தலான உடை அணிந்திருப்பதையும் அவர் உறுதி செய்தார். தனது நாய் தனது திருமண கொண்டாட்டங்களில் பங்கு வகிக்கும் என்பதையும், கல்யாண கலாட்டாவில் அது தனியாக இருப்பதாக உணர கூடாது என்பதிலும் அவர் அதிக முக்கியத்துவம் கொடுத்தார். இந்த நிகழ்வை மேலும் தனித்துவமாக்க, வினிஷா தனது செல்ல நாய்க்கு மணமகனின் ஷெர்வானியைப் போன்ற ஒரு சிறப்பு உடையை வாங்கி அணியச்செய்தார்.
மாப்பிள்ளை போல் உடை அணிந்த செல்ல நாய்
இந்த திருமண வீடியோ மனதை கவரும் வகையில் உள்ளது. மணமகனின் உடையை போலவே அழகான ஷெர்வானி அணிந்து மணமகளை நாய் சந்தித்தபோது, மணமகள் செல்ல நாயை மகிழ்ச்சியுடன் அணைத்துக் கொள்கிறார். வினிஷாவைப் பொறுத்தவரை, அவரது நாய் குடும்பத்தின் முக்கியமான உறுப்பினராக உள்ளது. மேலும் அவரது வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பகுதியாகவும் அந்த நாய் உள்ளது.
மணமகள் கட்டி அணைத்த செல்ல நாயின் வீடியோவை இங்கே காணலாம்:
வினிஷா தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் செல்ல நாயுடனான பல வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த அவர், "2022 இன் எனது மிகவும் அன்பான தருணம்" என்று தலைப்பில் எழுதியுள்ளார். இந்த வீடியோ ஒரு லட்சத்து 75 ஆயிரத்துக்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது. ஏராளமான வியூஸ்களும் இதற்கு கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)
மேலும் படிக்க | ஒரே இடி.. காரின் மேல் போய் விழுந்த நபர்: பதற வைக்கும் வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ