வைரல் வீடியோ: மனித வாழ்க்கை பல வித இறுக்கங்களையும் பிரச்சனைகளையும் கொண்டது. தினம் தினம் பல வித இன்னல்களையும் சவால்களையும் சந்திக்கும் நாம் இவற்றிலிருந்து சிறிதளவு நிவாரணம் கிடைத்தாலும் நிம்மதி அடைகிறோம். சில விஷயங்கள் அவ்வப்போது நம்மை திசை திருப்பி நமக்கு ஒரு மாறுதலை அளிக்கின்றன. அத்தகைய விஷயங்களில் சமூக ஊடகங்களுக்கு ஒரு முக்கிய பங்குண்டு.
இணையத்தில் பகிரப்படும் வீடியோக்களில் திருமண வீடியோகளுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இன்றைய காலகட்டத்தில் திருமணத்திற்கு முந்தைய படப்பிடிப்புகளில், அதாவது ப்ரீ வெட்டிங் ஷூட்டில் (Pre Wedding Shoot) வித்தியாசமான க்ரேஸ் காணப்படுகிறது. இப்போதெல்லாம் பெரும்பாலான தம்பதிகள் திருமணத்திற்கு முந்தைய ஷூட்களை செய்கிறார்கள். திருமணத்திற்கு முந்தைய படப்பிடிப்புகளுக்கு வெவ்வேறு இடங்களை தேர்வு செய்கிறார்கள். சிலர் மாளிகைகளிலும், கோட்டைகளிலும், சிலர் கடற்கரையிலும் படமெடுக்க விரும்புகிறார்கள். இவற்றின் பல வீடியோக்களையும் நாம் சமூக ஊடகங்களில் பார்த்துள்ளோம்.
இருப்பினும், சமீபத்தில் வெளியான ஒரு ப்ரீ வெட்டிங் ஷுட்டின் வீடியோ மிகவும் வித்தியாசமாக உள்ளது. இதில் ஒரு பெண் தனது திருமணத்திற்கு முந்தைய படப்பிடிப்பிற்கு ஆடம்பரமான இடத்தை தேர்வு செய்யவில்லை, மாறாக உடற்பயிற்சி கூடத்தை தேர்வு செய்திருக்கிறார்!! ஆம், மக்கள் உடற்பயிற்சி செய்யச் செல்லும் ஜிம்தான் அவரது ப்ரீ வெட்டிங்க் ஷுட்டிற்கான டெஸ்டினெஷன்!!
இந்த வித்தியாசமான ப்ரீ வெட்டிங் ஷுட் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பார்க்கப்படுகிறது. அந்த பெண் சேலை அணிந்து மணமகளை போல போல் முழு அலங்காரத்துடன் இருப்பதை வீடியோவில் நாம் காண முடிகின்றது. ப்ரீ வெட்டிங்க் ஷுட்டை ஜிம்மில் செய்ய மணப்பெண் போல் அவர் உடையணிந்து வந்துள்ளார். வீடியோவில், பெண் டம்பெல்ஸ் தூக்கி உடற்பயிற்சி செய்வதை காணலாம். அந்தப் பெண் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும்போது, ஒரு புகைப்படக்காரர் அவரைப் படம் எடுக்கிறார். ஜிம்மில் நடந்த ப்ரீ வெட்டிங் ஷூட்டை பார்த்து அங்கிருந்தவர்கள் மிகவும் ஆச்சரியமடைந்துள்ளனர்.
உடற்பயிற்சி செய்த பிறகு போட்டோஷூட் நடத்தப்பட்டது
உடற்பயிற்சின் மீது ஆர்வம் உள்ள பலர் பல மணி நேரம் ஜிம்மில் கழிப்பதை நாம் பார்த்துள்ளோம். ஆனால், இந்த மணப்பெண் ஒரு படி மெலே போய், தனது ப்ரீ வெட்டிங் ஷுட்டையே இங்கு நடத்தியுள்ளார். முழு அலங்காரத்துடன் வந்த மணப்பெண் ஜிம்மில் உடற்பயிற்சி செய்ததே அவர்களுக்கு ஆச்சரியம் அளித்தது. அது போதாதென்று அவர் அங்கு ப்ரீ வெட்டிங் ஷுட் வேறு செய்தது மற்றவர்களை ஆச்சரியத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது. இந்த வீடியோவைப் பார்த்த பிறகு, திருமணத்திற்கு முந்தைய படப்பிடிப்பிற்கு பெண் ஏன் இந்த இடத்தை தேர்வு செய்தார் என்று சமூக ஊடகங்களில் உள்ளவர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
மிக வித்தியாசமான ப்ரீ வெட்டிங் ஷுட் வீடியோவை இங்கே காணலாம்:
वैसे भी शादी से डर लगता है और ऐसा प्री वेडिंग शूट देखकर तो आत्मा कांप गई pic.twitter.com/wN4FrN0NiU
— HasnaZarooriHa (@HasnaZaruriHai) November 15, 2023
வீடியோ வைரல் ஆனது
இந்த வீடியோ சமூக ஊடக தளமான எக்ஸ் -இல் HasnaZarooriHai என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் (Netizens) இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். சிலர் அந்த பெண்ணுக்கு ஃபிட்னஸ் மீது உள்ள பற்றை பாராட்டியுள்ளார்கள். ஆனால் சிலரோ இது வெறும் கவன ஈர்ப்பு செயல் என விமர்சித்துள்ளனர். 'யாரை பற்றியும் கவலைப்படாமல் தனக்கு பிடித்ததை செய்யும் அந்த பெண்ணுக்கு வாழ்த்துக்கள்' என ஒரு பயனர் எழுதியுள்ளார். 'இதெல்லாம் சமூக ஊடகங்களில் டிரெண்டாக செய்யப்படும் வீண் கவன ஈர்ப்பு விஷயங்கள்' என மற்றொருவர் விமர்சித்துள்ளார்.
மேலும் படிக்க | பூனை மீது பாசத்தை பொழியும் குரங்கு: இணையவாசிகளை நெகிழ்ந்து அழ வைத்த வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ