வம்பிழுத்த ஆண்களை அடி வெளுத்த புரூஸ்லி பெண் - வைரல் வீடியோ

ரெஸ்டாரண்டுக்கு சாப்பிட வந்த ஆண்கள் இருவர் வம்பிழுத்தவுடன், பெண் ஒருவர் புரூஸ்லியாக மாறி அடி வெளுத்த வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 10, 2022, 05:15 PM IST
  • புரூஸ்லி பெண்ணின் அதிரடி
  • வம்பிழுத்தவர்களுக்கு சரமாரி அடி
  • இணையத்தில் வைரலாகும் வீடியோ
வம்பிழுத்த ஆண்களை அடி வெளுத்த புரூஸ்லி பெண் - வைரல் வீடியோ  title=

பெண்கள் பொதுவாக சாந்தமானவர்கள், அவர்களை எளிதில் ஏமாற்றிவிடலாம் என இன்னும் ஆண்களில் சிலர் நம்பிக் கொண்டிருக்கின்றனர். தங்களுக்கு இருக்கும் உடல் பலத்தை வைத்து அவர்களை கட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம் என நினைப்பவர்களே இங்கு ஏராளம். உண்மையில் ஆண்களைவிட பெண்களுக்கே பலம் என்பதை உணர மறுக்கிறார்கள். அவர்கள் இறங்கி அடித்தால் ஆண்களின் புஜபலம் எல்லாம் காற்றில் மறைந்து ஓடிவிடும். இதனை நீங்கள் ஏற்க மறுத்தால் இந்த வீடியோவையாவது பார்த்து தெளிந்து கொள்ளுங்கள். 

மேலும் படிக்க | மல்லாக்க படுத்து தூங்குறதுல என்னா சுகம்... வைரலாகும் பூனை தூங்கும் வீடியோ

வெளிநாட்டில் ரெஸ்டாரண்டுக்கு சாப்பிட சென்ற இருவர், பரிமாற வரும் பெண்ணிடம் வம்பு இழுத்துள்ளனர். இரண்டு பேர் இருக்கிறோம் என்கிற தைரியத்தில், அந்த பெண்ணிடம் தகராறு செய்துள்ளனர். அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை, அந்தப் பெண்ணுக்கு கராத்தே தெரியும் என்றும். வம்பு இழுத்த ஆண்களை சும்மாவிடக்கூடாது என நினைத்த அந்தப் பெண், அடுத்த நொடியே புரூஸ்லியாக மாறிவிடுகிறார். அப்புறம் என்ன... இருவருக்கும் தர்ம அடி தான். எகிறியும், பறந்தும் அந்தப் பெண் அடித்த அடியில் விட்டால் போதுமடா சாமி என இருவரும் தெறித்து ஓட பார்க்கின்றனர்.

இந்த வீடியோ இணையத்தில் இப்போது வைரலாகியுள்ளது. வீடியோவை பார்க்கும்போது ஏதோ இருவர் பெண்ணிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என நினைப்பீர்கள். அந்தப் பெண் அடிக்கத் தொடங்கும்போது தான் தெரியும் அவர்கள் அந்தப் பெண்ணிடம் ஏதோ தகராறு செய்திருக்கிறார்கள் என்று. பார்க்கும் பார்வையாளர்களுக்கே பதறுகிறது. அந்த பெண் அடிக்கும் ஒவ்வொரு அடியும் தர்ம அடியாக விழுகிறது. அதுவும் நாற்காலியில் உட்கார்ந்திருப்பவருக்கு விழும் அடியில் தயவு தாட்சண்யம் கொஞ்சமும் இல்லை. இந்த வீடியோவை பார்த்தாவது, பெண்கள் மீதான பொதுப்புத்தியை மாற்றிக் கொள்ளுங்கள். 

மேலும் படிக்க | மணமகளை பார்த்து தேம்பி அழுத மணமகன், காரணம் இதுதான்: வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News