விலங்குகள் எப்போதும் ஆச்சரியத்துக்குட்பட்டவை. அதிலும் வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகள் தினம் தினம் மனிதர்களை பரவசத்துக்கு ஆளாக்குபவை.
வீட்டில் வளர்க்கும்போது அவை வீட்டில் ஒருவராகவே வளரும். செல்ல பிராணிகள் செய்யும் குறும்புகள், நடவடிக்கைகள் எல்லாம் ரசிக்கும்படி இருப்பவை.
மேலும் படிக்க | Viral video: தொட்டு பாருலே! சிங்கத்தை சம்பவம் செய்த வரிக்குதிரை
தனது உரிமையாளருடன் கோபமாய் சண்டையிட்டு சிறு பிள்ளை போல் தனியாக அமர்ந்துகொள்வது, உரிமையாளரின் படுக்கையில் உரிமையோடு படுத்துக்கொள்வது, தனக்கு பிடித்த உணவை கொடுக்கவில்லை ஏக்கத்தோடு பார்ப்பது என செல்லப் பிராணிகள் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் அதிகம் பரவி நெட்டிசன்களை கவரும்.
Just relaxingpic.twitter.com/GXM1hhFRk5
— o̴g̴ (@Yoda4ever) June 9, 2022
அந்த வகையில் தற்போது பூனை ஒன்று மல்லாக்க படுத்து தூங்கும் வீடியோ வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் சாலையோரத்தில் ஒரு பூனை தனது நான்கு கால்களை நன்றாக விரித்தபடி அயர்ந்து உறங்குகிறது.
மேலும் படிக்க | பார்க்கில் உற்சாகமாக சறுக்கு மரம் விளையாடும் நாய்க்குட்டிகள்!
சத்தம் ஒன்று கேட்டதும் திடுக்கென்று விழித்துக்கொள்ளும் அந்தப் பூனை ஒரு நொடி பார்த்துவிட்டு மீண்டும் உறங்குகிறது.
இதனை பார்த்த நெட்டிசன்கள் வின்னர் படத்தில் வடிவேலு தூங்குவதுபோன்று பூனையும் தூங்குகிறது என கூறி அந்த வீடியோவை அதிகம் பகிர்ந்துவருகின்றனர். மேலும், இந்தப் பூனை தூங்குவதை பார்க்கும்போது எந்த உயிரினமாக இருந்தாலும் அவைகளுக்கு உறக்கம் என்று வந்தால் கைப்புள்ளைதான் எனவும் கமெண்ட் செய்துவருகின்றனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR